Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5வது வெற்றியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ்..: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

சென்னை: 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது வெற்றியை எட்டும் வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று சென்னையில் மோதுகிறது.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 2 போட்டிகள் நடந்துள்ளன.

டெல்லி, ஹைதராபாத் அணிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 3-வது போட்டி நடைபெற உள்ளது. இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

4 வெற்றி.. ஒரு தோல்வி..

4 வெற்றி.. ஒரு தோல்வி..

சென்னை அணி டெல்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூர் அணிகளை வீழ்த்தியது. ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

செம..சென்னை வீரர்கள்

செம..சென்னை வீரர்கள்

சென்னை அணியில் ஸ்மித், மெக்கல்லம், ரெய்னா, டுபெலிசிஸ், டோணி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் நெக்ரா சூப்பர்!

5வது வெற்றி..

5வது வெற்றி..

இதனால் சென்னை அணி பேட்டிங்கில் வலுவாக இருக்கிறது. 5-வது வெற்றியை நிச்சயம் பெறும் என்றே எதிர்பார்க்கல்லாம்

பஞ்சாப் அணி...

பஞ்சாப் அணி...

பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஷேவாக், முரளி விஜய், மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஜான்சன், சந்தீப் சர்மா, அக்சர் பட்டேல் ஆகியோர் உள்ளனர்.

ஷேவாக் கேப்டன்?

ஷேவாக் கேப்டன்?

இன்றைய போட்டியில் பெய்லி ஆடவில்லை என்றால் ஷேவாக் கேப்டன் பொறுப்பை ஏற்பார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை.

பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. வலுவான சென்னை அணி... போராடும் பஞ்சாப் அணி.. நிச்சயம் இன்றைய போட்டி விறுவிறுப்பாகத்தான் இருக்கும்.

Story first published: Saturday, April 25, 2015, 5:15 [IST]
Other articles published on Apr 25, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+