Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி மெக்கல்லம் ஆப்சென்ட்.. மும்பைக்கு எதிராக, சென்னைக்கு காத்திருக்கு 'ஒப்பனிங்' சவால்!

மும்பை: அதிரடி தொடக்க வீரர் பிரெண்டன் மெக்கல்லம், நடப்பு ஐபிஎல் சீசனில் இனி ஆடப்போவதில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவுக்கு பெரும் பின்னடைவாகும்.

நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான பிரெண்டன் மெக்கல்லம், உலக கோப்பை கிரிக்கெட்டில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே ஃபார்மில், ஐபிஎல் தொடரில் சென்னைக்காக களமிறங்கிய மெக்கல்லம், இங்கும், தொடக்க வீரராக களம் கண்டு பிச்சி உதறிவிட்டார்.

சதம் அடித்த மெக்கல்லம்

சதம் அடித்த மெக்கல்லம்

மொத்தம் 14 போட்டிகளில், மெக்கல்லம் குவித்தது 436 ரன்களாகும். ரன் சராசரி 33.53. இதில் 2 அரை சதங்கள், ஒரு சதமும் அடங்கும். பிற போட்டிகளிலும், அதிரடியாக ரன்களை குவித்துவிட்டு வலுவான அடித்தளம் போட்டுகொடுத்துவிட்டுதான் நடையை கட்டினார் மெக்கல்லம்.

ஸ்மித்துடன் டக்கர் ஆட்டம்

ஸ்மித்துடன் டக்கர் ஆட்டம்

மெக்கல்லம் மற்றும் ட்வைன் ஸ்மித் ஆகியோரின் தொடக்க ஆட்டம்தான் பல போட்டிகளில் சென்னையை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்துள்ளது. ட்வைன் ஸ்மித் 325 ரன்களை குவித்துள்ளார். லீக் ஆட்டங்களில் சென்னை புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளேஆப்புக்கு தகுதி பெற்றுள்ளது.

மெக்கல்லம் ஆப்சென்ட்

மெக்கல்லம் ஆப்சென்ட்

நாளை நடைபெறும் பிளேஆப் சுற்றில், மும்பையை எதிர்த்து சென்னை ஆடுகிறது. ஆனால், இதில் மெக்கல்லம் ஆடப்போவதில்லை என்பது சென்னைக்கு பின்னடைவான செய்திதான். ஏனெனில், 21ம் தேதி முதல் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆடுவதற்காக மெக்கல்லம் தாய் நாட்டு அணியுடன் சென்று சேர்ந்து கொண்டார்.

மைக்கேல் ஹசி

மைக்கேல் ஹசி

எனவே, நாளைய பிளேஆப்பில், ட்வைன் ஸ்மித் மற்றும் ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். மைக்கேல் ஹசியை, பஞ்சாப்புக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களமிறக்கி சோதித்து பார்த்தது அணி நிர்வாகம். அப்போட்டியில் 6 பந்துகளில் 1 ரன் எடுத்து அவுட் ஆனார் ஹஸ்சி. ஆனால், அவர் பழைய ஃபார்மில் அடித்து ஆடுவார் என்று நம்புகிறது சென்னை.

மலிங்கா கூட்டணி

மலிங்கா கூட்டணி

அதேநேரம், மும்பை பவுலிங் பலமானதாக உள்ளது. மலிங்கா மற்றும் நியூசிலாந்தின் மெக்லெனாகன் ஆகியோர், தொடக்க பந்து வீச்சில் அசத்துகிறார்கள். மலிங்காவின் வரைட்டி, மெக்லெனாகனின் ஸ்விங் பந்து வீச்சால், எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறுகிறார்கள். இதில் மெக்லானாகன், இங்கிலாந்துக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை, ஒருநாள் போட்டியில்தான் ஆடுகிறார். இதனால் மும்பைக்காக அவர் தொடர்ந்து ஆடுவதில் சிக்கல் இல்லை.

Story first published: Monday, May 18, 2015, 14:47 [IST]
Other articles published on May 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+