துவக்க விழாவுக்கு அனுஷ்காவுடன் ஜோடியாக கொல்கத்தா வந்த கோஹ்லி: அப்போ ஐபிஎல் போட்டியும்...?
கொல்கத்தா: ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்காவுடன் ஜோடியாக கொல்கத்தா வந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி என்றைக்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்தாரோ அன்றில் இருந்து அவர் தவறான காரணங்களுக்காக தான் செய்திகளில் வருகிறார். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் கோஹ்லி ஒரு ரன் எடுத்து அவுட்டானதற்கும், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததற்கும் அனுஷ்கா தான் காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து அவரை திட்டித் தீர்த்தனர்.
அனுஷ்காவுக்கு பாலிவுட்காரர்கள் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்தனர். இந்திய அணி தோற்றதற்கு அவர் எப்படி காரணமாக முடியும் என்று பாலிவுட் நட்சத்திரங்கள் கேள்வி எழுப்பினர்.

மும்பை ஏர்போர்ட்
உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த பிறகு கோஹ்லி அனுஷ்கா சர்மாவுடன் ஜோடி போட்டு மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினார். காதலியின் கையைப் பிடித்தவாரே சென்று காரில் ஏறினார்.

டெல்லி
டெல்லிக்கு சென்ற அனுஷ்கா கோஹ்லியின் பெற்றோரை சந்தித்து பேசினார். கோஹ்லியும், அனுஷ்காவும் ஜாலியாக ஊரை சுற்றிப் பார்த்தார்கள். டெல்லியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமணம் நடந்த அன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் கோஹ்லி தனது காதலியுடன் மும்பை கிளம்பிவிட்டார்.

ஐபிஎல் துவக்க விழா
ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. துவக்க விழாவில் பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன், ஷாஹித் கபூர், பர்ஹான் அக்தர் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.

அனுஷ்கா
ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொள்ள கோஹ்லி அனுஷ்கா சர்மாவுடன் ஜோடியாக கொல்கத்தா வந்துள்ளார். துவக்கத்திலேயே அனுஷ்காவா அப்படி என்றால் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடும் கோஹ்லி அவ்வளவு தானா என்று ஒரு கூட்டம் தற்போதே முணுமுணுக்கத் துவங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications