Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.5 லட்சம் இருக்குதா? அப்போ சிஎஸ்கே டீம் உங்களுக்குதான்!

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மதிப்பு மிகவும் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் சீனிவாசன் இருப்பதாக கூறி பிற அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், கேலி செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் ஆடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், பிசிசிஐயால் மதிப்பிடப்படுகிறது. அந்த மதிப்பில் 5 சதவீதத்தை உரிமத் தொகையாக பிசிசிஐக்கு, அணி நிர்வாகங்கள் அளிக்க வேண்டும். இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் நிர்வாக குழு சிஎஸ்கே தொடர்பான ஒரு விவரத்தை கண்டறிந்து அப்படியே ஷாக் ஆகி போயுள்ளது.

மொத்தமே ரூ.5 லட்சம்

மொத்தமே ரூ.5 லட்சம்

அதாவது, சிஎஸ்கே அணியின் மொத்த மதிப்பே ரூ.5 லட்சம்தான் என்று கணக்கிடப்பட்டுள்ளதாம். இதில் 5 சதவீதம் என்றால், 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே பிசிசிஐக்கு கட்டப்பட்டு வந்துள்ளது. ஆனால், வேறு ஒரு அமைப்பு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், சென்னை அணியின் மதிப்பு ரூ.450 கோடிக்கு மேல் என்று தெரியவந்துள்ளது.

பிசிசிஐ அதிருப்தி

பிசிசிஐ அதிருப்தி

இவ்வாறு அணியின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு பணத்தை மிச்சப்படுத்தியதில், பிசிசிஐ முன்னாள் தலைவரும், ஐசிசிசி சேர்மனுமான சீனிவாசனுக்கு பங்கு இருக்கலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. புதிய தலைவர் ஜக்மோகன் டால்மியாவும், இதனால் அதிருப்தியடைந்துள்ளாராம். எனவே பிசிசிஐ புதிய நிர்வாகிகள், சீனிவாசனின் ஐசிசி சேர்மன் பதவியை காலி செய்ய காய் நகர்த்துவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.

ஏற்கனவே சூதாட்ட பிரச்சினை..

ஏற்கனவே சூதாட்ட பிரச்சினை..

இந்நிலையில், சிஎஸ்கே அணி மதிப்பு ரூ.5 லட்சம்தான் என்று கூறப்பட்ட தகவல் வெளியானதும், பிற அணி ரசிகர்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் பெயர், சூதாட்டத்தில் அடிபட்டதால், சிஎஸ்கே அணியை ஐபிஎல் தொடரில் இருந்தே நீக்க முயற்சிகள் நடந்தன. இப்போது, இந்த ரூ.5 லட்சம் விவகாரமும் சூட்டை கிளப்பியுள்ளது.

காச எடு சிஎஸ்கேவ தொடு

காச எடு சிஎஸ்கேவ தொடு

ஏற்கனவே சிஎஸ்கேவின் தொடர்ச்சியான வெற்றிகளால் வயிற்றெரிச்சலில் இருக்கும், பிற அணிகளின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே அணியையும், சீனிவாசனையும் கிண்டல் செய்து வருகின்றனர். சிஎஸ்கே அணி ரூ.5 லட்சம்தானாம், நாங்கள் வாங்க தயார், சீனிவாசன் விற்க தயாரா என்பது போன்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகின்றன.

Story first published: Thursday, April 23, 2015, 10:52 [IST]
Other articles published on Apr 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+