ஐபிஎல் பைனலில் மும்பையை விட்டுவிட்டு மழையோடு போட்டிபோடப்போகிறது சென்னை!
கோல்கத்தா: ஐபிஎல் பைனலில் நாளை சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ள நிலையில், போட்டி நடைபெறும் கோல்கத்தாவில் பெரும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது.

கொல்கத்தாவில் நாளை இரவு 8 மணிக்கு ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மேற்குவங்க வானிலை துறை அதிகாரி ஒருவர் இன்று அளித்த பேட்டியில், நாளை கொல்கத்தாவில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மழை பெய்யும் நேரம் பற்றி நாளை காலை உறுதியாக தெரியும் என்றும் கூறியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வருண பகவானை வேண்டியபடி உள்ளனர்.
Story first published: Saturday, May 23, 2015, 18:14 [IST]
Other articles published on May 23, 2015


Click it and Unblock the Notifications