Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூர்-ஹைதராபாத் போட்டியில், இன்று ரன் மழையில்லை.. வான் மழைக்கே வாய்ப்பு- போட்டி சந்தேகமே!!!

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்தில், ஹைதராபாத் சன் ரைசர்ஸை தங்களது சொந்த மண்ணில் இன்று எதிர்கொள்கிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்த அணியில் அவர் உள்பட கெய்ல், டி வில்லியர்ஸ் போன்ற அபாயகரமான பேட்ஸ்மென்கள் உள்ளனர். கொல்கத்தாவுக்கு எதிராக கெய்ல் 96 ரன்கள் (56 பந்து) விளாசி அந்த அணி ஆடிய முதல் போட்டியில், வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

IPL 2015: Rain threat over RCB-SRH match in Bengaluru

தினேஷ் கார்த்திக் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்த தவறிவிட்டார். ரூ.12.5 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தபோது விளையாடியதைப் போல விமர்சனத்துக்கு இடமளிக்காத வகையில் மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், நியூஸிலாந்தின் மில்னே ஆகியோர் அணியில் இல்லாதது பெங்களூரின் பந்துவீச்சுக்கு பின்னடைவு. அவர்கள் இல்லாத குறையை, அபோட், வருண் ஆரோன் நிரப்ப வேண்டியது கட்டாயம். ஆனால், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி 36 ரன்களை வாரி கொடுத்தார் அபோட்.

மற்றொருபக்கம், ஹைதராபாத் அணி, சென்னையிடம் அடைந்த தோல்வியால் துவண்டு போயுள்ளது. பெங்களூவிடம் மேலும் சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கலாம். தவான், வார்னர், வில்லியம்சன் போன்றோரிடம் பேட்டிங்கில் மேலும் எதிர்பார்க்கிறது ஹைதராபாத் அணி. ஸ்டெய்ன், இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார் போன்ற முன்னணி பவுலர்கள் ஜொலித்தால்தான், வலுவான பெங்களூர் பேட்டிங் லைனை கட்டுப்படுத்த முடியும்.

இதனிடையே, போட்டி நடைபெறும் பெங்களூருவில் கடந்த இரு நாட்களாக மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இன்றும் மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. எனவே, போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

Story first published: Monday, April 13, 2015, 17:18 [IST]
Other articles published on Apr 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+