டெல்லிக்கு எதிரான த்ரில் ஆட்டத்தில், கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வென்றது ராஜஸ்தான்!
டெல்லி: டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை ருசித்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று 6வது ஆட்டமாக டெல்லி டேர் டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் அதிகபட்சமாக டுமினி 44 ரன்கள், ஐயர் (40) அகர்வால் (37), யுவராஜ் சிங் (27) மேத்யூவ்ஸ் 27 ரன்களும் எடுத்தனர்.

டெல்லி ரன் குவிப்பு
20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது டெல்லி அணி. ராஜஸ்தான் தரப்பில் டாம்பே ஒரு விக்கெட்டையும், மோரீஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஹூடா, ரஹானே அபாரம்
185 ரன்களை வெறறியிலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஹூடா 54 ரன்கள் அடித்தார். ரஹானே (47), சாம்சன் (11), ஸ்மித் (10), நாயர் (20), பால்க்னர் (17) ரன்கள் எடுத்தனர்.

கடைசி ஓவரில் திரில்
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் மோரிஸ் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் சவுத்தி இரண்டு ரன்கள் எடுத்தார். 3வது பந்தில் சவுத்தி ஒரு ரன் எடுக்க, 4வது பந்தை மோரிஸ் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி பந்தில் வெற்றி
5வது பந்தில் மோரிஸ் ஒரு ரன் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்டது. சவுத்தி அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி ராஜஸ்தானை கடைசி பந்தில் வெற்றிபெற வைத்தார். இதனால் ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது,

இரு வெற்றி..இரு தோல்வி
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் 2வது வெற்றியையும், டெல்லி இரண்டாவது தோல்வியையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications