அம்மாடியோவ்.. ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல் செய்த 'ச்சக்கா' சாதனையை பாருங்கள்!
பெங்களூரு: ஐபிஎல் தொடர்களில் மொத்தம் 200 சிக்சர்கள் விளாசி கிறிஸ் கெய்ல் புது சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தற்போது 8வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல், முதல் ஓவரிலேயே டிரெண்ட் பவுல்ட் பந்தில் சிக்சர் விளாசினா்.

டபுள் செஞ்சுரி
இது, கெய்ல் அடித்த 200வது ஐபிஎல் சிக்சராகும். நேற்றைய போட்டியில் அந்த ஒரு சிக்சரைத்தான் அவர் அடிக்க முடிந்தது. 21 ரன்களில் கெய்ல் அவுட் ஆனார்.

முதல் ஆட்டமே அமர்க்களம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், கெய்ல் 7 சிக்சர்கள் விளாசி, 96 ரன்கள் குவித்து தனது அணி வெற்றி பெற உதவினார்.

ரெய்னா
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் கெய்ல் ஆகும். இவருக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளார். ரெய்னா மொத்தம் 134 சிக்சர்கள் அடித்துள்ளார்.

ரோகித், டோணி
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா 130 சிக்சர்களுடன், 3வது இடத்திலும், கேகேஆர் வீரர் யூசுப் பதான் 116 சிக்சர்களுடன், 4வது இடத்திலும், சிஎஸ்கே கேப்டன் டோணி, 115 சிக்சர்களுடன், 5வது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications