Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8-வது ஐ.பி.எல்: பெங்களூரில் டோணியுடன் இன்று மோதல்- ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பாரா கோஹ்லி?

பெங்களூர்: 8வது ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மல்லு கட்ட இருக்கின்றன...

நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இக்கட்டில் பெங்களூரு..

இக்கட்டில் பெங்களூரு..

அடுத்தடுத்த தோல்விகளால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி, இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவானது என்பதால் நிச்சயமாக பெங்களூர் அணி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

கெயில், டிவில்லியர்ஸ் பலம்

கெயில், டிவில்லியர்ஸ் பலம்

பெங்களூர் அணியில் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் ஆகியோரைத் தவிர எஞ்சிய வீரர்கள் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மன்விந்தர் பிஸ்லா, டேவிட் வியஸ் ஆகியோரது ஆட்டம் சற்றே ஆறுதலானதுதான்

இன்றைய ஆட்டத்தில் மன்விந்தர் பிஸ்லா- கெயில் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.. கேப்டன் கோஹ்லி, டிவில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக், டேவிட் வியஸ், ரிலீ ரொசாவ் ஆகியோர் சிறப்பாக ஆடினால்தான் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வேகப் பந்து வீரர் மிட்செல் ஸ்டார்க் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக அவர் முதல் 3 ஆட்டத்தில் விளையாடவில்லை. உலக கோப்பையில் முத்திரை பதித்த அவரது வருகை பெங்களூர் அணிக்கு கூடுதல் பலமாகும்.

வலுவான சென்னை அணி

வலுவான சென்னை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சூப்பராகத்தான் இருக்கிறது. பிரென்டன் மெக்கல்லம், ஸ்மித், சுரேஷ் ரெய்னா, டூபிளெஸ்ஸி, டோணி, பிராவோ என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பிராவோ அதிரடி தொடரும்?

பிராவோ அதிரடி தொடரும்?

ராஜஸ்தானுக்கு எதிராக 36 பந்துகளில் 62 ரன்கள் குவித்த பிராவோவிடம் இருந்து இந்த முறையும் அதிரடியை எதிர்பார்க்கலாம். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆசிஷ் நெஹ்ரா, ஈஸ்வர் பாண்டே, மோஹித் சர்மா, டுவைன் பிராவோ ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின்-ஜடேஜா கூட்டணியும் சென்னையின் பலம்..

Story first published: Wednesday, April 22, 2015, 12:09 [IST]
Other articles published on Apr 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+