Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையுடன் மோதப்போவது பெங்களூரா, ராஜஸ்தானா? இன்றைய எலிமினேட்டரில் முடிவு!

புனே: 8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனேயில் இன்று இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறி விடும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாது. ராஞ்சியில் 22ம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் கொல்கத்தாவில் 24ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

IPL 2015: Royal Challengers Bangalore Vs Rajasthan Royals

இந்த சுற்றில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இவ்விரு அணிகளும், ஐபிஎல் தொடரில் இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 7 வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இந்த சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை எளிதில் வென்றது. மற்றொரு லீக் ஆட்டம் மழையால் ரத்தானது.

இரு அணியிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தரமான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் அதிரடிக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி, சோனி செட்மேக்ஸ், சோனி கிக்ஸ் டெலிவிஷன்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Story first published: Wednesday, May 20, 2015, 10:47 [IST]
Other articles published on May 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+