Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஐபிஎல் போட்டியை வென்றது கேகேஆர் இல்லை, யார் தெரியுமா?

கொல்கத்தா: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் தனது முதல் ஐபிஎல் போட்டியை தந்தையுடன் கண்டு மகிழ்ந்தார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் ஹேப்பி நியூ இயர் இந்தி படத்தில் தந்தையுடன் ஒரு காட்சியில் நடித்தே பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டார். இந்நிலையில் ஷாருக் தனது மகனின் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய கற்றுக் கொடுத்தபோது எடுத்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டார்.

ஆப்ராம் துடைப்பத்துடன் இருக்கும் புகைப்படம் மிகவும் பிரபலம் ஆனது.

கேகேஆர்

கேகேஆர்

ஐபிஎல் 8வது சீசனின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெற்றது. முதல் போட்டியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஆப்ராம்

ஆப்ராம்

ஐபிஎல் முதல் போட்டியை காண ஷாருக்கான் தனது மகள் சுஹானா, மூத்த மகன் ஆர்யன், இளைய மகன் ஆப்ராம் ஆகியோருடன் மைதானத்திற்கு வந்திருந்தார். ஆப்ராம் தனது முதல் ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்தார்.

ஷாருக்

ஷாருக்

போட்டி முழுவதும் ஷாருக் ஆப்ராமுடன் தான் இருந்தார். இருவரும் நைட் ரைடர்ஸ் டிசர்ட் அணிந்திருந்தனர். ஆப்ராம் கூட்டமாக இருந்த மைதானத்தில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

கம்பீர்

கம்பீர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வென்றதும் ஷாருக்கான் கௌதம் கம்பீரை கட்டிப்பிடித்தார். இதை பார்த்த ஆப்ராம் தன்னை கட்டிப்பிடிக்குமாறு அடம் பிடித்தார்.

க்யூட்

க்யூட்

அழகான குட்டி ஆப்ராம் மைதானத்தில் இருந்த அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார். பலரின் கண்களும் ஆப்ராம் மீதே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவு

தெளிவு

ஷாருக்கானுக்கு எங்கு எதை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது என்பது நன்கு தெரிந்துள்ளது. குட்டி மகனை அழைத்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மைதானத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, April 9, 2015, 16:11 [IST]
Other articles published on Apr 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+