Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிறிஸ் கெய்ல் வர்றாரு... பேட்டை தூக்கி ஒளிச்சு வை!

பெங்களூரு: மீண்டும் ஒரு ஐபிஎல் திருவிழா இதோ இன்று தொடங்குகிறது. நாளை முதல் போட்டிகள் களை கட்டப் போகின்றன. அடித்து வெளுக்கப் போகும் வீரர்களைப் பார்த்து ரசிக்க ரசிகர்களும் தயாராகி விட்டனர்.

விராத் கோஹ்லி, டோணி, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், கிறிஸ் கெய்ல், மெக்கல்லம், ஏப் டிவில்லியர்ஸ், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் என அதிரடி வீரர்களை ரசிக்க ரசிகர்கள் பரபரப்பாக காத்துள்ளனர்.

ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு வீரர் அதிரிபுதிரியாக ஆடுவது என்பது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த காலங்களில் பலரும் பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்துச் சென்றுள்ளனர். இந்த வருடம் சிக்கப் போவது யார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் டாப்பாக விளையாடி ரன்களைக் குவித்த அதிரிபுதிரி வீரர்கள் 10 பேரின் பட்டியல் இது....

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணயின் கிறிஸ் கெய்ல்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 2013ம் ஆண்டு போட்டியில் 66 பந்துகளில் 175 ரன்களைக் குவித்து முதலிடத்தில் இருக்கிறார்.

2வது இடத்தில் மெக்கல்லம்

2வது இடத்தில் மெக்கல்லம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸில் அப்போது இருந்த பிரன்டன் மெக்கல்லம், 2008ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 73 பந்துகளில் 158 ரன்களைக் குவித்திருந்தார்.

மீண்டும் கெய்ல்

மீண்டும் கெய்ல்

3வது இடத்தில் மீண்டும் கெய்ல். 2012ல் டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிரான போட்டியில் 62 பந்துகளில் 128 ரன்களைக் குவித்திருந்தார் ராயல் சேலஞ்சர்ஸின் கெய்ல்.

முரளி விஜய்

முரளி விஜய்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அப்போது இருந்த முரளி விஜய், 2010ம் ஆண்டு நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளில் 127 ரன்களைக் குவித்திருந்தார்.

ஷேவாக்

ஷேவாக்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரேந்திர ஷேவாக், 2014ல் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக நடந்த போட்டியில் 58 பந்துகளில் 122 ரன்களைக் குவித்திருந்தார்.

பால் வல்தாட்டி

பால் வல்தாட்டி

கிங்ஸ் லெவன் பஞ்சாபின் பால் வல்தாட்டி, 2011ல் சென்னைக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 120 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஷேவாக்

ஷேவாக்

2011ல் நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக டெல்லியின் ஷேவாக், 56 பந்துகளில் 119 ரன்களைக் குவித்தார்.

சைமண்ட்ஸ்

சைமண்ட்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், 2008ம் ஆண்டு 53 பந்துகளில் 117 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மைக் ஹஸ்ஸி

மைக் ஹஸ்ஸி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைக் ஹஸ்ஸி, 2008ம் ஆண்டு நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 54 பந்துகளில் 116 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விருத்திமான் சஹா

விருத்திமான் சஹா

2014ல் பெங்களூரில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் விருத்திமான் சஹா 55 பந்துகளில் 115 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த ஆண்டு யாரெல்லாம் அடித்து நொறுக்கப் போகிறார்களோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Tuesday, April 7, 2015, 13:42 [IST]
Other articles published on Apr 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+