Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த மழையிலும் உங்களுக்கு ஆட்டம் கேட்குதா.. நடுவர் தர்மசேனாவிடம் பாய்ந்த கோஹ்லி

ஹைதராபாத்: ஐபிஎல் போட்டியில் நேற்று இலங்கை நடுவர் குமார்தர்மசேனாவுடன், விராட் கோஹ்லி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மழை காரணமாக சுமார் இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு பிறகுதான் நேற்று, ஆட்டம் தொடங்கியது. 11 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது மாற்றப்பட்டது.

IPL 2015: Virat Kohli gets into heated argument with umpire

ஹைதராபாத் முதலில் பேட் செய்த நிலையில், 10வது ஓவரில் மீண்டும் மழை அதிகமாக கொட்ட தொடங்கியது. அந்த ஓவரின் 4வது பந்து கோஹ்லியை நோக்கி சென்றபோது, மழை ஈரத்தால், கோஹ்லியின் கையை விட்டு பந்து நழுவி ஓடியது.

இதனால் ஆத்திரமடைந்த கோஹ்லி, நடுவர் குமார் தர்மசேனாவிடம் சென்று, மழை பெய்யும்போது போட்டியை நிறுத்த வேண்டியதுதானே.. என்று வாக்குவாதம் செய்தார். மற்றொரு களநடுவரான அனில் சவுத்திரி, கோஹ்லியை சமாதானம் செய்த நிலையில், குமார்தர்மசேனாவிடம் பெங்களூர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வாக்குவாதத்தை தொடர்ந்தார்.

இந்த சம்பவத்தால் தர்மசேனா, அப்செட்டாக காணப்பட்டார்.

Story first published: Saturday, May 16, 2015, 13:45 [IST]
Other articles published on May 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+