Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை அணியை வீழ்த்துவது கடினம்.. கைவிரித்த பெங்களூர் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ்

ராஞ்சி: சென்னை அணியை வெல்வது கடினம் என்றாலும், டோணியின் சொந்த ஊரில் சென்னையை வெல்வதை எதிர்பார்க்கிறோம் என்று பெங்களூர் அணியின் நட்சத்திரம், டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

ஐபிஎல் 2வது குவாலிஃபையரில், பெங்களூர் அணி இன்று சென்னை சூப்பர் கிங்சுடன் மோத உள்ளது.இந்த போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்து பெஙக்ளூரு அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் கூறியதாவது:

சவால்

சவால்

சென்னையுடனான போட்டி கடினமான போட்டியாக அமையும் என்று கருதுகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் நல்ல அணி, சவால் ஏற்படுத்தும் அணி என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும், அதனால் அந்த அணியை வீழ்த்துவது கடினமே.

டோணியின் சொந்த ஊர்

டோணியின் சொந்த ஊர்

ஆனாலும், ராஞ்சிக்குச் சென்று அவர்களை வீழ்த்துவதை விரும்புகிறோம். அங்கிருந்து இறுதிக்கு முன்னேறி கோப்பையை வென்றால் மேலும் வியக்க வைக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் படிப்படியாக மேற்கொள்வோம்.

அதிரடி வீரர்

அதிரடி வீரர்

டி வில்லிய்ர்ஸ் ஆரஞ்சு நிற தொப்பியை கைபற்ற சிறிது தொலைவில் தான் உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் அவர் 3 வது இடத்திற்கு வந்து உள்ளார். இதுவரை 512 ரன்கள் அடித்து உள்ளார்.

வார்னர் முதலிடம்

வார்னர் முதலிடம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அஜின்கெய ரஹானே 540 ரன்கள் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 562 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

சென்னைதாங்க

இதனிடையே, ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், இன்றைய போட்டியில் சென்னைதான் வெல்லும் என்றுள்ளார். தனது டிவிட்டர் தளத்தில் வார்னர் இவ்வாறு கூறியுள்ளார்.

Story first published: Friday, May 22, 2015, 12:30 [IST]
Other articles published on May 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+