பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் களமிறங்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கிறிஸ் கெய்லுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரர் ருச்சோவ் களமிறக்கப்பட்டார். ஆனால் அவரும் சோபிக்கவில்லை.

இதனால் சென்னையின் வெற்றி மேலும் எளிதானது. இதுகுறித்து பெங்களூரு அணி வீரர் இக்பால் அப்துல்லா கூறுகையில், கிறிஸ் கெய்ல் காயத்தால் அவதிப்படவில்லை. அவர் நல்ல உட் தகுதியுடன்தான் உள்ளார். ஆனால்,, இன்னும் தொடர்ச்சியாக பல போட்டிகளில் ஆட வேண்டியுள்ளதால், நேற்றைய போட்டியில் அவருக்கு ரெஸ்ட் கொடுத்தோம்.
பெங்களூரு அணியில், கெய்ல், டி வில்ரியர்ஸ், கோஹ்லி போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்தும்கூட, வெற்றிகளை தொடர்ச்சியாக பெருவதில் தடுமாறிவருகிறோம். இந்த நிலை மாறும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வலிமையான சிஎஸ்கேவை வீழ்த்துவதற்காக, ருச்சோவை திடீரென களமிறக்கி பெங்களூரு சோதித்து பார்த்ததாக தெரிகிறது. கெய்ல்லுக்கு எதிராக டோணி வியூகம் அமைத்திருப்பார், எனவே ருச்சோவை சர்ப்ரைஸ் பேக்கேஜாக இறக்கிவிடலாம் என்பது அந்த அணியின் திட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.