For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படி இருந்த மேக்ஸ்வெல் இப்படி ஆயிட்டாரே...இன்றைய போட்டியில் மேக்சிமத்தை எதிர்பார்க்கலாமா?

By Veera Kumar

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணியின் கிளன் மேக்ஸ்வெல் தொடர்ந்து சொதப்பலாக ஆடி வருகிறார். அந்த அணி ஆடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெல்லவும், மேக்ஸ்வெல் ஃபார்மில் இல்லாதது ஒரு காரணம்.

அவர் இதுவரை ஆடிய போட்டிகளில் 7, 6, 15 மற்றும் 33 ரன்கள்தான் எடுத்துள்ளார். நான்கு போட்டிகளிலும் சேர்த்து மொத்தமே 61 ரன்கள்தான் எடுத்துள்ளார் மேக்ஸ்வெல்.

IPL 2015: Will KXIP's Glenn Maxwell fires today

கடந்த ஆண்டு ஐபிஎல்லில் முதல் 7 போட்டிகளிலேயே 435 ரன்களை குவித்தார் மேக்ஸ்வெல். அதில் பல நைட்டீஸ் அடங்கும்.

இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறியுள்ளதாவது: உலக கோப்பையில் ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. அந்த வெற்றி பெற்ற கொண்டாட்டத்தில் இருந்து நேரடியாக மற்றொரு ஆட்டத்துக்கு நான் வந்துள்ளேன். எனவே, அந்த கொண்டாட்டத்தில் இருந்து, இந்த மனநிலைக்கு மாற காலம் எடுக்கிறது என்றுள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சுடன், பஞ்சாப் மோதுகிறது. இன்றாவது மேக்ஸ்வெல் பட்டாசு வெடிக்குமா, கடந்தாண்டு போல அந்த அணி கலக்குமா என்பது தெரியவரும்.

ஜான்சன், சந்தீப் ஷர்மா ஆகியோர் நம்பிக்கையளிக்கும் அளவில் பந்து வீசி வருகின்றனர். ஆனால், உரிய நேரத்தில் அணி ஒரே முகமாக ஆடாமல் சொதப்பிவருகிறது.

Story first published: Tuesday, April 21, 2015, 16:35 [IST]
Other articles published on Apr 21, 2015
English summary
Australian all-rounder Glenn Maxwell believes the emotional high of his country's World Cup win has contributed to his form slump for Kings XI Punjab in the Indian Premier League (IPL) this season.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+