Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரருடன் இரவு முழுக்க ஹோட்டல் அறையில் தங்கிய இளம் பெண்! திடுக் தகவல் அம்பலம்

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பல அணிகளும், விதிமுறைகளை மீறியுள்ளதை ஊழல் தடுப்பு பிரிவு கண்காணித்து இ-மெயில் மூலம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. சிஎஸ்கே வீரர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இளம் பெண் இரவு முழுவதும் தங்கியிருந்தார் என்றும் அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2013ம் ஆண்டு பெரும் முறைகேடுகள் நடந்தன. வீரர்கள் பலரும் சூதாட்ட புக்கிகளிடம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தடை செய்யப்பட்டனர் பல வீரர்கள், அதில் முக்கியமானவர் ஸ்ரீசாந்த்.

மேலும் பல முறைகேடு

மேலும் பல முறைகேடு

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு அடுத்த ஐபிஎல் சீசனான 2014லும் பல முறைகேடுகள் நடந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பாதுகாப்பு யூனிட் தலைவர் என்ற முறையில், கடந்த ஆண்டு முறைகேடுகள் பற்றி ரவி சாஸ்திரி, பல அணி நிர்வாகங்களுக்கும் இ-மெயில் மூலம், தாங்கள் கண்டறிந்தவை குறித்து குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.

படகு பார்ட்டி

படகு பார்ட்டி

அதில் சில விதிமீறல்கள் இதோ:

2014, ஏப்ரல் 30ல், பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, தனது அணி வீரர்களுக்காக மும்பை கடல்பகுதியில் படகு ஒன்றில் பார்ட்டி கொடுத்தார். வெளியாட்கள் யாருமே பங்கேற்காத அந்த பார்ட்டியில் ஒரு பெண் மட்டும் வெளியில் இருந்து பங்கேற்றுள்ளார்.

பலர் பங்கேற்பு

பலர் பங்கேற்பு

2014 மே 8ல், ஷாருக்கானின் வர்த்தக பார்ட்னர் ஒருவர் கொல்கத்தா அணிக்கு கொடுத்த பார்ட்டியில் பல நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கான அனுமதி ஐபிஎல் அமைப்பிடம் பெறப்படவில்லை.

ராத்திரி முழுக்க

ராத்திரி முழுக்க

2014 மே 8ல், மும்பை ஐடிசி கிராண்ட் மவுரியா ஹோட்டலில், தங்கியிருந்த சிஎஸ்கே வீரர் ஒருவரை, சம்மந்தம் இல்லாத இளம் பெண் ஒருவர் சந்தித்துள்ளார். இரவு 9.50 மணிக்கு சிஎஸ்கே வீரரின் அறைக்குள் நுழைந்த அந்த பெண்மணி, மறுநாள் காலை 6 மணி 5 நிமிடங்களில்தான் அறையை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து அந்த வீரரிடம் விசாரித்தபோது, அந்த பெண் தனது தோழி என்று தெரிவித்தார்.

மறுநாளே மற்றொருவர்

மறுநாளே மற்றொருவர்

2014 மே 9ல், மற்றொரு சிஎஸ்கே வீரர் தங்கியிருந்த அறைக்குள், மற்றொரு இளம் பெண் சென்றார். இரவு 10 மணி 10 நிமிடங்களுக்கு அறைக்குள் சென்ற அந்த பெண், மறுநாள் காலை 7 மணி 30 நிமிடங்களுக்குதான் வெளியே வந்தார். இதுகுறித்து அந்த வீரரிடம் விசாரித்தபோது, அந்த பெண் தனக்கு மிகவும் நெருக்கம் என்றும், அவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால், விசாரித்தபோது, அந்த பெண் ஏற்கனவே ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வேறு சில மூத்த வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும், அடிக்கடி ஸ்டேடியங்களில் அவரை பார்க்கலாம் என்பதும் தெரியவந்தது. இவ்வாறு அந்த இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது.

அது போன வருஷம்

அது போன வருஷம்

இதுகுறித்து சிஎஸ்கே மற்றும் கேகேஆர் தரப்பில் பதில் வரவில்லை என்றபோதிலும், பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் போன்ற பிற அணிகளின் தரப்பில் பேசியவர்கள், தாங்கள் ஏற்கனவே அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டோம் என்றும், போன வருட கதை அதோடு முடிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, May 22, 2015, 18:51 [IST]
Other articles published on May 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+