Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீறுகொண்டெழுந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது நெகிழ்ச்சி: ஜாகீர்கான்

டெல்லி: காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாகீர்கான், காயம் காரணமாக அணியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியது. ஆனாலும் காயத்தால் குணமடையாத ஜாகீர்கான் களமிறங்கவில்லை.

IPL 2015: Zaheer Khan Happy With Comeback After Injury

பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் முறையாக நேற்றுதான் அவர் களமிறங்கினார். இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஜாகீர்கான் வெறும் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பஞ்சாப் அணியின் முக்கியமான சேவாக், வோரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின் களமிறங்கியது குறித்து ஜாகிர் கான் கூறுகையில், பந்துவீச ஆரம்பித்த போது மனம் பதைபதைப்பாக இருந்தது. ஆனால் வழக்கமான பந்துவீச்சை என்னால் வெளிப்படுத்த முடிந்தது.

கிரிக்கெட்டில் என் கதை முடிந்து விட்டதாக எழுதினார்கள். எனது கிரிக்கெட் வாழ்க்கையும் ஒருநாள் முடிவடையும். அதனை நானே சொல்வேன் என்றார்.

Story first published: Saturday, May 2, 2015, 14:30 [IST]
Other articles published on May 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+