இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்.. கோஹ்லியே பாராட்டிய அந்த பேட்ஸ்மேன் யார் தெரியுமா?
பெங்களூர்: இந்த தலைமுறையின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று ஐபிஎல் தொடரில், தனது சக ஆட்டக்காரராக விளையாடும் டி வில்லியர்சுக்கு, விராட் கோஹ்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூர் வீரர் டி வில்லியர்ஸ் 42 பந்துகளில் 6 சிக்சர், 7 பவுண்டரிகள் உதவியோடு 82 ரன்கள் குவித்தார்.
ஓப்பனிங்கில் களமிறங்கிய விராட் கோஹ்லி 51 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

பார்ட்னர்ஷிப்
இவ்விரு உலகத்தர பேட்ஸ்மேன்களும் இணைந்து, 2வது விக்கெட்டுக்கு 157 ரன்களை குவித்தனர். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைக்கும் வகையில் இவ்விருவர் ஆட்டமும் இருந்தது.

வெற்றி
இந்த பார்ட்னர்ஷிப் உதவியால் பெங்களூர் அணி 227 ரன்கள் குவித்து, ஹைதராபாத்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றிக்கு டி வில்லியர்ஸ் முக்கிய காரணம் என்று கோஹ்லி புகழ்ந்துள்ளார்.

சிறந்த அனுபவம்
டி வில்லியர்சுடன் இணைந்து ஆடுவது எப்போதுமே சிறப்பான அனுபவமாகும். கடந்த சீசனின்போது மும்பையில், இருவரும் சிறப்பாக ஒரு பார்ட்னர்ஷிப் கொடுத்தோம். என்னிடமிருந்து நெருக்கடியை முழுமையாக டி வில்லியர்ஸ் எடுத்துவிடுவார்.

சிறந்த பேட்ஸ்மேன்
டிவில்லியர்ஸ் எத்தகைய கடினமான பந்துகளையும் அநாயாசமாக அடிப்பார். சில வகை ஷாட்டுகளை அவரால் மட்டுமே அடிக்க முடியும். இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications