Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்: 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி: 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தோற்கடித்தது.

ஐ.பி.எல். தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஜாகீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளும் மோதின. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஜாகீர் கான் பவுலிங்கை தேர்வு செய்தார்.

IPL 2016: Amit Mishra, Quinton de Kock shine as Delhi Daredevils thrash Kings XI Punjab

பஞ்சாப் அணியின் சார்பில் வோராவும், முரளி விஜய்யும் துவக்கம் தந்தனர். பவன் நெகி வீசிய இரண்டாவது ஓவரில், வோரா தூக்கி அடித்த பந்தை தவறவிட்டார் ஜாகீர் கான். அப்போது மூன்றாவது ரன்னுக்கு முயற்சித்த முரளி விஜய்யை ரன்-அவுட் செய்து வெளியேற்றினார் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் டி காக்.

அமித் மிஸ்ரா சுழலில் ஷான் மார்ஷ் (13), டேவிட் மில்லர் (9), மேக்ஸ்வெல் (0), வெளியேறினர். இதன்பின்னர் பிரத்வொயிட் வீசிய 6-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய வோரா 32 ரன்னில் மிஸ்ரா பந்தில் அவுட் போல்டானார்.

பின்னர் பஞ்சாப் அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 3 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியது. டெல்லி அணியில் டி காக், எஸ்.எஸ்.ஐயர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 3 ரன்களில் ஐயர் ஆட்டமிழக்க, டி காக்குடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். சீரான இடைவெளியில் ரன் எடுத்து வந்த சாம்சன் 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அசத்தலாக விளையாடிய டி காக் 38 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

இதனையடுத்து டெல்லி அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி காக் 59 ரன்களும், நெகி 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Saturday, April 16, 2016, 0:23 [IST]
Other articles published on Apr 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+