Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் அதிரடி அரை சதம்.. ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீண்ட குஜராத் லயன்ஸ்

கொல்கத்தா: தினேஷ் கார்த்திக் அதிரடி சதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி அசத்தியுள்ளது குஜராத் லயன்ஸ். இதனால் தொடர்ச்சியாக 3 தோல்விகள் பெற்றிருந்த குஜராத் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

கொல்கத்தாவில், நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நேற்றைய போட்டியில், 159 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விரட்டியது குஜராத் அணி.

IPL 2016: Gujarat Lions snap losing streak with 5-wicket win over Kolkata

ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பிரெண்டன் மெக்கல்லம் (29ரன்கள்) மற்றும் ட்வைன் ஸ்மித்தின் 27 ரன்கள் உதவியோடு 5.3 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் பெற்றது குஜராத் அணி.

இருப்பினும் அடுத்தடுத்து அவ்விரு விக்கெட்டுகளும் விழுந்தபோது களம்புகுந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், அதிரடியாக விளையாடினார். 29 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 51 ரன்கள் குவித்தார் தினேஷ் கார்த்திக்.

இதன்பிறகு சளைக்காமல் 10 பந்துகளில் 29 ரன்கள் குவித்த ஆரோன் பின்ச்சின் அதிரடியும் அணிக்கு கொடுக்க, 2 ஓவர்கள் மிச்சமிருந்த நிலையிலேயே குஜராத் வெற்றி பெற்றது.

முதலில் தொடர் வெற்றிகளை ருசித்தாலும், ஹாட்ரிக் தோல்வியால் தத்தளித்த குஜராத் அணியை கார்த்திக் கரை சேர்த்துள்ளார். இதனால், 14 புள்ளிகளுடன் குஜராத் லயன்ஸ் அணி முதலிடத்திற்கு தாவி சென்றுள்ளது. 2வது இத்தில் ஹைதராபாத், 3வது இடத்தில் கொல்கத்தா அணிகள் உள்ளன.

Story first published: Monday, May 9, 2016, 16:22 [IST]
Other articles published on May 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+