Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நொறுக்கிய ஹைதராபாத்... கொல்கத்தா அவுட்... 2வது குவாலிபயரில் குஜராத்தை சந்திக்கிறது!

டெல்லி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான பிளே ஆப் போட்டியில் ஹைதராபாத் அணி அபாரமாக வெற்றி பெற்று 2வது குவாலிபயர் ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.

நாளை நடைபெறும் 2வது குவாலிபயர் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியும், ஹைதராபாத்தும் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

முன்னதாக டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டியில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தியது.

ஹைதராபாத் பிரமாத பேட்டிங்

ஹைதராபாத் பிரமாத பேட்டிங்

முதலில் பேட் செய்த ஹைராபாத் அணி பிரமாதமாக பேட் செய்தது. குறிப்பாக யுவராஜ் சிங் 30 பந்துகளில் 44 ரன்களைக் குவித்தார். இதனால் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களைக் குவித்தது.

பந்து வீச்சில் அபாரம்

பந்து வீச்சில் அபாரம்

அதன் பின்னர் பந்து வீச்சிலும் ஹைதராபாத் கலக்கியது. இதனால் கொல்கத்தா வீரர்களால் ரன் எடுக்க முடியாமல் போனது. குறிப்பாக அதிக அளவிலான யார்க்கர்களை வீசி கொல்கத்தா வீரர்களை நிலை குலைய வைத்து விட்டனர் ஹைதராபாத் பவுலர்கள்.

140 ரன்களுடன் ஸ்டாப்!

140 ரன்களுடன் ஸ்டாப்!

இதன் காரணமாக 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களுடன் கொல்கத்தாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இதனால் அவர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

முதல் முறையாக

முதல் முறையாக

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 2013ம் ஆண்டு முதல் ஆடி வருகிறது. ஆனால் இப்போதுதான் குவாலிபயர் பிரிவுக்கு அது முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை தெரியும் கதை

நாளை தெரியும் கதை

நாளை 2வது குவாலிபயர் பிரிவு ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை ஹைதராபாத் அணி சந்திக்கவுள்ளது. குஜராத் அணி முதல் குவாலிபயர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியுற்றதாகும்

Story first published: Thursday, May 26, 2016, 10:53 [IST]
Other articles published on May 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+