Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 விக்கெட்டுகளை வீழ்த்தியும், ஸம்பாவுக்கு கிடைத்தது ஜிம்பலக்கடி பம்பாதான்!

விசாகபட்டினம்: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. தவான் அதிகபட்சமாக 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த யுவராஜ் சிங் 21 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து ஆடம் ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸம்பாவின் அடுத்த ஓவரில் வில்லியம்ஸன் வீழ்ந்தார். அவர் 37 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறினர். இதனால் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.

ஸம்பா 6 விக்கெட்டுகள்

ஸம்பா 6 விக்கெட்டுகள்

புனே அணி சார்பில் அசத்தலாக பந்து வீசிய ஆடம் ஸம்பா, 4 ஓவர்களில், 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்.பி.சிங், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஐபிஎல் வரலாற்றில் 2வது

ஐபிஎல் வரலாற்றில் 2வது

ஐபிஎல் வரலாற்றில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பவுலர் என்ற பெருமையை ஸம்பா பெற்றார். முன்னதாக, பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொகைல் தன்வீர் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவரை ஐபிஎல் சாதனை பவுலிங் இலக்கமாக தொடருகிறது.

ஆரம்பமே நடுக்கம்

ஆரம்பமே நடுக்கம்

இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது புனே அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே டக் அவுட்டாக, கவாஜாவும் 11 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனால் புனே அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அஸ்வின் திடீர் விஜயம்

அஸ்வின் திடீர் விஜயம்

இதனையடுத்து பெய்லியுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்தார். அஸ்வினை முன்கூட்டியே அனுப்பி சோதனை செய்து பார்த்தார் டோணி. இந்த ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை ஒன்று இரண்டாக சேர்த்தனர். 12-வது ஓவர் முடிவில் 68 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. பெய்லி 34 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த அஸ்வின் 29 (25) ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

நெஹ்ரா அசத்தல்

நெஹ்ரா அசத்தல்

திவாரியும் 9 ரன்களில் ஆட்டமிழக்க டோணியும், பெரேராவும் கடையில் போராடினார். புனே வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை நெஹ்ரா வீசினார். ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 2வது பந்தில் டோணி ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் பெரேரா கேட்சாகி ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 3 பந்தில் 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

நெஹ்ராவிடம் வீழ்ந்த டோணி

நெஹ்ராவிடம் வீழ்ந்த டோணி

4வது பந்து லோ-ஃபுல்டாசாக வந்தது. அதை சிக்ஸர் அடித்து அசத்தினார் டோணி. ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்த பந்தை பவுன்சராக வீசினார் நெஹ்ரா. சுதாரித்து ஃபுல் ஷாட் அடிக்க முற்பட்டார் டோணி. ஆனால் பந்து பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பருக்கு பின்னால் சென்றது.

ரன் அவுட்

ரன் அவுட்

இரு ரன்கள் எடுக்க டோணி முயன்றார். ஆனால் அவர் ரன் அவுட் ஆனார். டோணி ரன் அவுட் ஆவது மிகவும் அரிது. நேற்று வேறு வழியில்லாமல் ஓடி ரன் அவுட்டுக்கு விக்கெட்டை பறி கொடுத்தார். பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்த யுவராஜ்சிங், முகத்தில் ஆக்ரோஷம் காட்டினார்.

சிறப்பான கேட்ச்

சிறப்பான கேட்ச்

இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசி பந்தில் ஸம்பா விக்கெட் கீப்பர் ஓஜாவிடம் கேட்சாகி அவுட்டானார். பேட்டில் பட்டு முதல் ஸ்லிப் பகுதியை நோக்கி சென்ற பந்தை ஓஜா ஜம்ப் செய்து சிறப்பாக கேட்ச் பிடித்தார். அந்த பந்தை விட்டிருந்தால் பவுண்டரி சென்று சூப்பர் ஓவருக்கு வழி வகுத்திருக்கும்.

புனே தோற்றது

புனே தோற்றது

20 ஓவர்கள் முடிவில் புனே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. நெஹ்ரா அதிக பட்சமாக 3 விக்கெட்டுகளை விழ்த்தினார். 7 வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. 6 விக்கெட்டுக்களை வீழ்த்திய புனே அணியின் ஸம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Wednesday, May 11, 2016, 13:18 [IST]
Other articles published on May 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+