Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங்னா என்ன தெரியுமா.. "கெய்ல்"னா என்னன்னு தெரியுமா... அவ்வளவு சீக்கிரம் கதை முடிஞ்சுருமா?

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல் சரியான பார்முக்கு வராமல் இருப்பது அவரது முடிவுரையின் முகவுரையா என்ற விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

ஐபிஎல் என்றால் கெய்லின் பேட்டிங் வான வேடிக்கைதான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும். பெங்களூரு அணி கோப்பையை இதுவரை வென்றதில்லை என்றாலும் கூட கெய்லின் அதிரடி ஆட்டம் இல்லாத பெங்களூர் அணியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

அந்த அளவுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜாம்பவான் வீரராக திகழ்ந்து வரும் கெய்ல் இந்தத் தொடரில் பிரகாசிக்கத் தவறி விட்டார். தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

தொடர்ந்து சொதப்பல்

தொடர்ந்து சொதப்பல்

இந்தத் தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார் கெய்ல். 2 போட்டிகளில் நீக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட வந்த கெய்ல் ஒரு பவுண்டரி அடித்தார். அத்தோடு சரி, 5 ரன்களில் ஆட்டமிழந்து திரும்பி விட்டார்.

4வது சொதப்பல்

4வது சொதப்பல்

இந்தத் தொடரில் 4வது முறையாக ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகியுள்ளார் கெய்ல் என்பது பெங்களூரு ரசிகர்களுக்கு பெரும் கவலையைக் கொடுத்துள்ளது. இந்தத் தொடரில் அவர் ஆடிய நான்கு போட்டிகளில் 1,0,7,5 என ரன்களை எடுத்துள்ளார் கெய்ல். இடையில் நான்கு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. மகள் பிறந்ததால் ஊருக்குப் போயிருந்தார்.

கெய்ல் சுமை கோஹ்லி தலையில்

கெய்ல் சுமை கோஹ்லி தலையில்

கெய்ல் சரியாக விளையாடாத காரணத்தால் கேப்டன் கோஹ்லிக்குத்தான் இரட்டிப்பு வேலை. அவரும் கெய்ல் போல சூறாவளியாக ஆடி ரன்களைக் குவித்து அணியை கரை சேர்த்து வருகிறார்.

நம்ம கெய்லா இது

நம்ம கெய்லா இது

வழக்கமாக டி20 போட்டிகளில் கெய்ல் விளையாடும் விதமே அலாதியாக இருக்கும். அட்டகாசமாக ஆடக் கூடியவர். ஐபிஎல் போட்டி ஒன்றில் அவர் குவித்த 175 ரன்கள் என்ற இமாலய சாதனையே அதற்கு சான்று. ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆடுவதைப் பார்க்க தனிக் கூட்டமே கூடும். ஆனால் இந்த முறை அந்தக் கெய்லைக் காணவில்லை.

உலகக் கோப்பையிலிருந்தே

உலகக் கோப்பையிலிருந்தே

உண்மையில் கெய்லின் மோசமான பார்ம் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே தொடங்கியது எனலாம். அந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் சதம் போட்டார் கெய்ல். மற்ற போட்டிகளில் அவர் 4,5,4 என்றுதான் ஸ்கோர் செய்திருந்தார். அவர் ஆடிய கடைசி டி20 போட்டிகளில் 1,0,7,5 என்றுதான் ரன் எடுத்துள்ளார்.

முடிவுரையா

முடிவுரையா

கெய்ல் கதை இத்தோடு முடிந்தது. இனியும் அவர் முன்பு போல அதிரடியாக ஆட மாட்டார். அவரது அதிரடியின் முடிவின் ஆரம்பம் என்று அதற்குள் சிலர் பேசத் தொடங்கி விட்டனர். ஆனால் கெய்ல் அப்படிப்பட்டவரா, அவரது பேட்டிங் அப்படிப்பட்டதா, அவர் அவ்வளவு சீக்கிரம் சுருங்கிப் போவாரா என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

Story first published: Thursday, May 12, 2016, 16:50 [IST]
Other articles published on May 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+