பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை எளிதாக வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்- படங்கள்
மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், பெங்களூரை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி.
முன்னதாக, டாஸ் வென்ற மும்பை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
பெங்களூர் அணிக்காக கோஹ்லி, டி வில்லியர்ஸ் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. கெயிலுக்கு பதிலாக களமிறங்கிய ராகுலும் சொற்ப ரன்னில் வெளியேறினார்.
Story first published: Friday, April 22, 2016, 14:03 [IST]
Other articles published on Apr 22, 2016


Click it and Unblock the Notifications
