Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை-பெங்களூர் இன்று மோதல்.. அப்பாவான மகிழ்ச்சியில் தாயகம் திரும்பினார் கெயில்

மும்பை: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 14வது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சரஸ் அணிகள் மோத உள்ளன.

இவ்விரு அணிகளும் மோதும் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் மும்பை அணி இது வரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. எனவே பெங்களூருக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மீண்டு வர முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியிடம் தோல்வி

டெல்லியிடம் தோல்வி

அதேநேரம் பெங்களூர் அணி கடந்த போட்டியில் பெரிய ஸ்கோர் விளாசியும், டெல்லியிடம் தோற்றதில் கொஞ்சம் அப்செட்டாக உள்ளது. அதற்கு முந்தைய போட்டியை பெங்களூர் அணி வென்றிருந்தது.

மும்மூர்த்திகள்

மும்மூர்த்திகள்

டிவில்லியர்ஸ், கோஹ்லி, வாட்சன் ஆகிய மும்மூர்த்திகள் பட்டையை கிளப்பியபோதிலும், அதிகம் எதிர்பார்க்கப்படும் கிறிஸ் கெயில் சோபிக்க தவறி வருகிறார்.

கெயில் தடுமாற்றம்

கெயில் தடுமாற்றம்

முதல் போட்டியில் ஒரு ரன்னும், கடந்த போட்டியில் டக்-அவுட்டும் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார் கிறிஸ் கெயில். இருப்பினும் அவர் மீது நம்பிக்கையுள்ளதாக கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

புயலுக்கு குழந்தை

புயலுக்கு குழந்தை

இன்றைய போட்டியில் கிறிஸ் கெயில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கெயிலுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவல் அவரது மனைவியிடமிருந்து வந்தது. டெல்லி போட்டி முடிந்ததுமே தாயகம் பறந்துவிட்டார் கெயில்.

பவுலருக்கு வாய்ப்பு

பவுலருக்கு வாய்ப்பு

கெயில் இன்றி இன்று களமிறங்குகிறது பெங்களூர் அணி. மில்னே அல்லது கனே வில்லியம்ஸ் ஆகிய இருவரில் ஒரு பவுலரை கெயிலுக்கு பதிலாக களமிறக்க பெங்களூர் திட்டமிட்டுள்ளதாம். கெயிலுக்கு இதுதான் முதல் குழந்தையாகும். இன்றைய போட்டியோடு சேர்த்து 2 போட்டிகளில் கெயில் விளையாடப்போவதில்லை என்று ஆர்சிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Wednesday, April 20, 2016, 12:23 [IST]
Other articles published on Apr 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+