ஐபிஎல் 2016: பரபரப்பான போட்டியில் பஞ்சாப்பை ஜஸ்ட் 1 ரன்னில் வீழ்த்திய பெங்களூர்
மொஹாலி: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 64 (35) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி தரப்பில் கரிப்பா, சந்தீப் சர்மா தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்

வெற்றி இலக்கு
இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

விக்கெட் சரிவு
தொடக்க வீரர்களாக கேப்டன் முரளி விஜய்யும், ஆம்லாவும் களமிறங்கினர். ஆம்லா 21 (20) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சாகாவும் 16 (13) ரன்கள் எடுத்து சிறிது நேரத்திலேயே வெளியேறினார். டேவிட் மில்லர் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

முரளி விஜய்
ஒரு புறம் விக்கெட்டுக்கள் விழுந்தாலும், முரளி விஜய் தனது அதிரடியால் பட்டையை கிளப்பினார். இருப்பினும் 57 பந்துகளில் 89 ரன்கள் குவித்திருந்த போது அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

மூன்று ஓவர்கள்
பஞ்சாப் அணி கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 18வது ஓவரில் 13 ரன்களும், 19 வது ஓவரில் 7 ரன்களும் மட்டுமே எடுக்கப்பட்டது. அந்த ஓவரை வாட்சன் அற்புதமாக வீசியிருந்தார்.

கடைசி ஓவரில்
இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 17 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அந்த ஓவரை ஜோர்தன் வீசினார். ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் 2வது பந்தில் பவுண்டரியும், 3வது பந்தில் சிக்ஸரும் விளாசினார் ஸ்டோனிக்ஸ்.

கடைசி பந்தில் 4 ரன்கள்
4வது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் ஸ்டோனிக்ஸ். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு ரன்களில் வெற்றியை ருசித்தது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.


Click it and Unblock the Notifications