Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பைனலைவிட அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை அள்ளிய போட்டி எது தெரியுமா?

மும்பை: சமீபத்தில் நிறைவடைந்த 9வது ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றிருக்கலாம், ஆனால், ரசிகர்கள் அதிகமாக ரசித்து பார்த்ததாக டிவி சேனல் டி.ஆர்.பி சுட்டிக்காட்டுவதோ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, குஜராத் லயன்ஸ் மோதிய ஒரு போட்டியைத்தான்.

இந்த ஐபிஎல் தொடர் சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ், சோனி இஎஸ்பிஎன் ஆகிய மூன்று சேனல்கள் வாயிலாக பல்வேறு மொழிகளின் வர்ணனையோடு ஒளிபரப்பானது.

IPL 2016 viewed by 357 million on TV

இத்தொடரை மொத்தம் 357 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதில், பெங்களூர்-குஜராத் அணிகள் கடந்த வாரம் புதன்கிழமை மோதிய குவாலிஃபையர்-1 போட்டியைத்தான் மிக அதிக ரசிகர்கள் பார்த்துள்ளனர். பைனல் போட்டியைவிட இதற்கு ரசிகர்கள் அதிகம்.

இரு அணிகளிலுமே சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்ததால், வார நாளாக இருந்தபோதிலும், அந்த போட்டியை அதிகம் பேர் பார்த்துள்ளனர். அப்போட்டிக்கான டிவி ரசிகர்கள் எண்ணிக்கை சுமார் 1 கோடி என்ற அளவில் இருந்தது. அப்போட்டியில் டிவில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 3, 2016, 13:49 [IST]
Other articles published on Jun 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+