ஆயிரம் ரன்களை தாண்டவில்லை.. அப்படியும் சாதனை படைத்த கோஹ்லி
பெங்களூர்: நடப்பு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன், விராட் கோஹ்லி 4 சதங்களுடன், 973 ரன்களை குவித்தார்.
இதுவரை ஒரு ஐபிஎல் தொடரில் இத்தனை அதிக ரன்கள் அடித்தது யாருமில்லை. கிறிஸ் கெயில் மற்றும் மைக்கேல் ஹஸ்சி ஆகியோர் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஒரே சீசனில் 733 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 81 ரன் எடுத்தாலே விராட் 1000 ரன்களை கடந்து சாதனையை நிகழ்த்த் முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த போட்டியில் விராட் கோஹ்லி டக்-அவுட் ஆனார்.
இந்நிலையில், இன்றைய பைனல் போட்டியில் 81 ரன்களை கடந்து சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கோஹ்லி இன்று 54 ரன்களில் அவுட் ஆனார். இருப்பினும், அவர்தான் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களிலேயே அதிகபட்ச ரன் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஆகமொத்தம், ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் ஆடிய, விராட் கோஹ்லி 4 சதங்களுடன், 973 ரன்களை குவித்தார்.


Click it and Unblock the Notifications