Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடக்க விழாவில் எமி ஜாக்சன் கலை நிகழ்ச்சி.. எந்தெந்த பிரபலங்களின் நிகழ்ச்சிகள் என்று?

ஹைதராபாத்: இந்த வருடம் ஐபிஎல் சீசன் 10ல் ஒரு புதுமை செய்யப்ப்பட்டுள்ளது. அதன்படி 8 அணிகளும் தங்கள் ஊரிலேயே தொடக்க நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.

அந்த அணிகள் தங்கள் ஊரில் பங்கேற்கும் முதல் போட்டிகளுக்கு முன்பாக, துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.

இதன்படி இன்று ஹைதராபாத், நாளை புனே, நாளை மறுநாள் குஜராத், 8ம் தேதி பஞ்சாப், அதே நாளில் பெங்களூர், 9ம் தேதி மும்பை, 13ம் தேதி கொல்கத்தா, 15ம் தேதி டெல்லி அணிகள் துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.

எமி ஜாக்சன்

எமி ஜாக்சன்

ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் துவக்க விழா நிகழ்ச்சியில், நடிகை எமி ஜாக்சன் பங்கேற்று கலை நிகழ்ச்சி நடத்திக் காட்ட உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் இவர் என்பதால் கூட்டம் அள்ளும் வாய்ப்புள்ளது. 7 மணிக்கு இக்கலை நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

பாலிவுட் நடிகர்

பாலிவுட் நடிகர்

ஏப்ரல் 6ம் தேதியான நாளை புனே நகரிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் துவக்க விழா நிகழ்ச்சியில், பாலிவுட் மற்றும் மராத்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் பங்கேற்று நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

ஷாருக்கான் வருகை

ஷாருக்கான் வருகை

ஏப்ரல் 7ம் தேதி, ராஜ்கோட்டில் டைகர் ஷரோப் கலை நிகழ்ச்சி நடத்துவார். அன்றைய தினம், குஜராத் லயன்ஸ்ஸ மற்றும் கொல்கத்தா அணிகள் அங்கு மோத உள்ளதால், பாலிவுட் பாட்ஷா, ஷாருக்கானும் மைதானத்திற்கு வர உள்ளார். இந்த நிகழ்ச்சி மதியம் 3 மணிக்கு நடைபெறும்.

இந்தூரில் கலை நிகழ்ச்சி

இந்தூரில் கலை நிகழ்ச்சி

ஏப்ரல் 8ம் தேதி பஞ்சாப் மற்றும் புனே அணிகள் இந்தூர் ஸ்டேடியத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளன. முன்னதாக மதியம் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இதை யார் நிகழ்த்த உள்ளனர் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

பெங்களூரில்

பெங்களூரில்

ஏப்ரல் 8ம் தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. அதன்பிறகு டெல்லி அணியை பெங்களூர் எதிர்கொள்ள உள்ளது. கலை நிகழ்ச்சி நடத்துவோர் குறித்த விவரம் இல்லை.

மும்பையில் யார்?

மும்பையில் யார்?

மும்பை வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 9ல் மும்பை அணி, கொல்கத்தாவை சந்திக்க உள்ளது. இரவு 7 மணிக்கு தொடங்க உள்ள கலை நிகழ்ச்சியை யார் நடத்த உள்ளனர் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

சாரதா கபூர்

சாரதா கபூர்

ஏப்ரல் 13ம் தேதி கொல்கத்தாவில், அந்த அணி பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் கலை நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை சாரதா கபூர், பாடகி மோனாலி தாக்கூர் பங்கேற்கிறார்கள்.

பர்னீதி சோப்ரா

பர்னீதி சோப்ரா

ஏப்ரல் 15ம் தேதி டெல்லியில் அந்த அணி பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் கலை நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகரை பர்னீதி சோப்ரா பங்கேற்று ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

Story first published: Thursday, April 6, 2017, 12:49 [IST]
Other articles published on Apr 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+