போட்டியில் தோற்றபோதும், ரசிகர்கள் இதயங்களை வென்ற யுவராஜ்சிங்!
டெல்லி: ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி டேர்டெவில்சிடம் தோற்றிருக்கலாம், ஆனால், ஹைதராபாத் வீரரான யுவராஜ்சிங் ரசிகர்களின் இதயத்தை வென்றுவிட்டார்.
யுவராஜ்சிங் தனது வழக்கமான ஸ்டைலிஷ் பேட்டிங் மூலம் 41 பந்துகளில் 70 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் நின்று, ஹைதராபாத் அணியை 185 ரன் குவிக்க துணை செய்தார். ஆனால் ரசிகர்களை அந்த ஆட்டத்தை விட அதிகமாக உணர்ச்சிவசப்பட்டது அவரது ஒரு செயலுக்காகத்தான்.
டெல்லி அணி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பேட் செய்தபோது, அவருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்டார் யுவராஜ்சிங். இது ஒன்றும் சாதாரண விஷயமில்லை.
ஈகோ பிரச்சினை
இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர்-ஜூனியர்கள் நடுவே பிளவு இருப்பது நீண்ட கால சரித்திரம். சச்சின், சேவாக் போன்றோர் இதை ஒரு காலகட்டத்தில் உணர்ந்தனர். ஜூனியர்கள் தங்களை மதிப்பதில்லை என சில சீனியர் பிளேயர்கள் வாய்விட்டே கூறியிருந்தனர்.

ஷூ லேஸ்
இந்த சூழலில்தான் 19 வயது ரிஷப் பந்த்துக்கு, 35 வயதாகும் யுவராஜ்சிங் ஷூ லேஸ் கட்டி விட்டுள்ளார். மேலும் யுவராஜ்சிங் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர். ரிஷப் பந்த், 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி வீரர்தான். இருப்பினும் இதையெல்லாம், அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பாராட்டு
யுவராஜின் செயலை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி டிவிட்டுகள் வெளியிட்டுள்ளனர். களத்தில் வசைமாரி பொழிபவர்கள் இதை பார்த்து திருந்த வேண்டும் என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.
சிங் இஸ் கிங்
சிங் இஸ் கிங் என யுவராஜ்சிங்கை பாராட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.
நல்ல வீரர்
மோசக்கார ஆட்டம் ஆடாமல், சண்டை போடாமல் ஆடும் வீரர்களை கொண்ட அணிக்கு வழங்கப்படும் விருதுக்கு யூவி புள்ளிகளை சேகரித்துவிட்டார் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications