Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10-வது ஐபிஎல்: சொந்த மண்ணில் டெல்லி அணியை வீழ்த்தியது பெங்களூர் !

பெங்களூர்: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 5- வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாசில் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

[Scorecard]

IPL 2017: Match 5: RCB win the toss, opt to bat first

இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டேவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, April 9, 2017, 7:29 [IST]
Other articles published on Apr 9, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+