Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மக்களே நல்லா கேட்டுங்கங்க.. அவங்க தோத்ததுக்கு இவர்தான் காரணமாம்..!

இந்தூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நேற்றைய தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக அந்த அணியின் கேப்டன் ஷான் வாட்சன் கூறியுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், பெங்களூரு அணிக்கும் இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டி செம விறுவிறுப்பாக இருந்தது.

பெங்களூரு அணியின் பேட்டிங் பெரும் துயரமாக காணப்பட்டது. அதேசமயம், ஏபி டிவில்லியர்ஸ் கடைசி நேரத்தில் காட்டிய அதிரடி அணியை கெளரவமான ஸ்கோருக்கு கொண்டு சென்றது. ஆனால் பஞ்சாப் அணி அந்த ஸ்கோரை எட்டிப் பிடித்து வெற்றியைத் தட்டிச் சென்றது.

8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

ஸ்கோர் துரத்திப் பிடிக்கக் கூடிய ஒன்று என்பதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக வெற்றி பெற்றது. 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது. டிவில்லியர்ஸின் அதிரடி வீணாகிப் போனதால் பெங்களூரு ரசிகர்கள் அப்செட்டாகி விட்டனர்.

நொந்து கொண்ட வாட்சன்

நொந்து கொண்ட வாட்சன்

இந்தத் தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக கேப்டன் ஷான் வாட்சன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நான் சரியாக பேட் செய்யவில்லை. நல்ல தொடக்கத்தைத் தரவில்லை. முதல் ஓவரிலேயே அவுட்டானது தவறு. நான்தான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்றார் வாட்சன்.

அக்சர் படேல்

அக்சர் படேல்

அக்சர் படேல் பந்து வீச்சில் ஷான் வாட்சன் அழகாக வீழ்த்தப்பட்டார். அவர் அவுட்டானபோதே அணியின் தடுமாற்றம் தெள்ளத் தெளிவாகி விட்டது. கெய்லும், கோஹ்லியும் இல்லாத நிலையில், டிவில்லியர்ஸ் மீது அத்தனை பொறுப்பும் வந்து விழுந்தது.

180 எடுத்திருந்தால்

180 எடுத்திருந்தால்

வாட்சன் மேலும் கூறுகையில் 170 அல்லது 180 எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது இயலாமல் போய் விட்டது. பந்து வீச்சிலும் நாங்கள் சரியில்லை. பனி அதிகம் இருந்ததால் எங்களுக்கு அது பெரும் சிரமமாகி விட்டது என்றார் வாட்சன்.

Story first published: Tuesday, April 11, 2017, 11:29 [IST]
Other articles published on Apr 11, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+