For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்க 5 பேரையும் பார்த்து வைச்சுக்குங்க.. ஐபிஎல்-இல் எதிரணிகளை திணற வைக்கப் போறாங்க!!

சென்னை : 2019 ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில், இந்த தொடரில் எந்தெந்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற விவாதங்கள் நடந்து வருகிறது.

அந்த வரிசையில், இளம் சுழற் பந்துவீச்சாளர்களில் யார் யார், இந்த ஐபிஎல் தொடரில் சாதிக்கப் போகிறார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.

முஜிப் உர் ரஹ்மான்

முஜிப் உர் ரஹ்மான்

கடந்த 2018 ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஆஃப்கன் வீரர் இவர். வலது கை சுழற் பந்துவீச்சாளரான இவர், கூக்ளி வீசுவதில் கில்லாடி. கடந்த சீசனில் 11 போட்டிகளில் 14 விக்கெட்கள் எடுத்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அஸ்வின் தலைமையில் ஆடப் போகும் முஜிப், இந்த ஆண்டும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த ஆண்டில் 16 போட்டிகளில் 18 விக்கெட்கள் அள்ளினார். கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார் குல்தீப்.

 ரஷித் கான்

ரஷித் கான்

மற்றொரு இளம் ஆப்கன் வீரர் ரஷித் கான். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தார். இந்த ஆண்டும் அதே பணியை தொடர்வார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மிஸ்டரி பந்துவீச்சாளர் என அறியப்படுகிறார். எந்த மாதிரி பந்து வீசுவார் என்பதை யூகிக்க முடியாத நிலையில், எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என கூறப்படுகிறது. பஞ்சாப் அணி இவரை 8.4 கோடிக்கு வாங்கியுள்ளது. முதல் ஐபிஎல் தொடரில் வருண் அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வாஷிங்க்டன் சுந்தர்

வாஷிங்க்டன் சுந்தர்

மற்றொரு தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர். இவர் 2017 முதல் ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், கடந்த 2018 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 4 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார்.

Story first published: Friday, March 22, 2019, 16:15 [IST]
Other articles published on Mar 22, 2019
English summary
IPL 2019 : 5 Young Spinners to watch out in this season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+