போன சீசன்ல நல்லா ஆடினாரு.. வாய்ப்பு கிடைச்சுது! இந்த சீசன்ல ஒழுங்கா ஆடலை.. அப்ப இப்படிதான் ஆகும்!!
Recommended Video

சென்னை : அம்பதி ராயுடு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. அதற்கு காரணம் ஐபிஎல்.
கடந்த 2018 ஐபிஎல் சீசனில் அதிரடியாக ஆடிய ராயுடு 16 போட்டிகளில் 602 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் மூலம் இந்திய அணியில் அம்பதி ராயுடு நீண்ட காலம் கழித்து வாய்ப்பு பெற்றார்.

சிறப்பான ஆட்டம்
பின்னர், ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் சிறப்பாக ஆடினார். தொடர்ந்து நியூசிலாந்து தொடரிலும் ரன் குவித்தார். ஆனால், உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியின் கடைசி சர்வதேச தொடரான ஆஸ்திரேலிய தொடரில் அம்பதி ராயுடு ரன் குவிக்கவில்லை.

அணியில் இடம் மறுப்பு
இதனால், முதல் மூன்று போட்டிகளுக்கு பின் அவருக்கு ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காது என கூறப்பட்டு வந்தது.

ஐபிஎல் எதிர்பார்ப்பு
அதன் பின் ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு தன்னை நிரூபித்து உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என்ற பேச்சு இருந்தது. ஆனால், ராயுடு ஐபிஎல் தொடரிலும் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ரன் குவிக்கவில்லை
இதுவரை ஆறு போட்டிகளில் துவக்க வீரர், மிடில் ஆர்டர் என தன் பேட்டிங் வரிசையை மாற்றி ஆடியும் மொத்தமாக 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் எடுத்த அதிகபட்ச ரன் 28 மட்டுமே. ஆறு போட்டிகளின் முடிவில் அவரின் பேட்டிங் சராசரி 15-ஐ தாண்டவில்லை.

வாய்ப்பு கடினம்
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அம்பதி ராயுடு தன் மோசமான பேட்டிங்கால் தனக்கான வாய்ப்பை சுருக்கிக் கொண்டுள்ளார். எந்த ஐபிஎல் தொடரால் அணியில் வாய்ப்பு பெற்றாரோ, அதே ஐபிஎல் தொடரால் தன் வாய்ப்பை இழக்கவும் போகிறாரா அம்பதி ராயுடு?


Click it and Unblock the Notifications