For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வினை வைத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் சென்னை காவல்துறை.. பார்த்து சிரித்த ஆஸி. வீராங்கனை!

சென்னை : 2௦19 ஐபிஎல் தொடரில் அஸ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தாலும் செய்தார், அது கிரிக்கெட் உலகைத் தாண்டியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறை அஸ்வினை வைத்து, போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு விளம்பரம் செய்து வருகிறது.

பாதுகாப்பு தர்றது கஷ்டம்... வேண்டாம்.. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்த இலங்கை பாதுகாப்பு தர்றது கஷ்டம்... வேண்டாம்.. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்த இலங்கை

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்துவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை லிசா ஸ்தாலேக்கர் சென்னையின் சாலை ஒன்றில் அஸ்வினின் மன்கட் ரன் அவுட்டை வைத்து செய்யப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றை பார்த்து அதை புகைப்படம் எடுத்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

புகைப்படம்

புகைப்படம்

அதில் அஸ்வின் மன்கட் ரன் அவுட் செய்த போது, ஜோஸ் பட்லர் கிரீஸை விட்டு வெளியே நிற்கும் போது அஸ்வின் ரன் அவுட் செய்யும் புகைப்படமும், மறுபுறம், இருசக்கர வாகன ஓட்டிகள், சிக்னல் ஜீப்ரா கோட்டை தாண்டி நிற்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கை கோடு

வாழ்க்கை கோடு

இந்த புகைப்படத்தின் கீழே "கிரீஸ்-ஓ அல்லது சாலையோ.. இது உங்கள் வாழ்க்கை கோடு" என எழுதப்பட்டுள்ளது. அதாவது, கிரீஸை தாண்டினால் ரன் அவுட்.. சிக்னல் கோட்டை தாண்டினால் விபத்து என கூறியுள்ளார்கள்.

கோட்டுக்கு பின்னே இருங்கள்

கோட்டுக்கு பின்னே இருங்கள்

இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த லிசா "சாலை விதிகளை எல்லோருக்கும் புரியும்படி எளிமைப்படுத்தினால்" என குறிப்பிட்டு சிரித்துள்ளார். கோட்டுக்கு பின்னே இருங்கள் (#staybehindtheline) எனவும் ஹாஷ்டேக் போட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரம்

காவல்துறை கிரிக்கெட் வீரர்களின் சர்ச்சைக்குரிய விஷயங்களை வைத்து விளம்பரம் செய்வது ஒன்றும் புதிதல்ல.. இதற்கு முன் பும்ரா வீசிய நோ பாலை வைத்து மும்பை காவல்துறை விளம்பரம் செய்திருந்தது. தற்போது அஸ்வின் சென்னை காவல்துறையிடம் சிக்கி உள்ளார்.

Story first published: Sunday, April 28, 2019, 13:03 [IST]
Other articles published on Apr 28, 2019
English summary
IPL 2019 : Ashwin Mankad incident used by Chennai Police to create awareness
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X