For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க வீரர்களுக்கு வயசு அதிகம்.. ஃபிட்னெஸ் டெஸ்ட் வைச்சா உண்மை தெரிஞ்சுடாதா? பலே சிஎஸ்கே!!

Recommended Video

IPL 2019 :தகுதி தேர்வு வைச்சா உண்மை தெரிஞ்சுடாதா?.. பிளெம்மிங்- வீடியோ

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு அணி முக்கிய உடற்தகுதி தேர்வான யோ-யோ தேர்வு வைக்கப் போவதில்லை என அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு தயாராகும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக பயிற்சிகள் செய்து வருகிறது. மற்ற அணிகள் உடற்தகுதி தேர்வான யோ-யோ தேர்வை செய்து முடித்துள்ள நிலையில், கடந்த சீசனின் சாம்பியன் சென்னை அணி, அதெல்லாம் தேவையில்லை என கெத்தாக முடிவு செய்துள்ளது.

நேரம் இல்லை

நேரம் இல்லை

இது குறித்து ஸ்டீபன் பிளெம்மிங் மிக வெளிப்படையாகவே பேசினார். சிஎஸ்கே அணியின் ஃபிட்னெஸ் குறித்த பட்டியலில் யோ-யோ தேர்வே கிடையாது. எங்களுக்கு என சில ஃபிட்னெஸ் எதிர்பார்ப்புகள் உள்ளன. எங்களுக்கு இதில் எல்லாம் நாங்கள் நேரம் செலவு செய்வதில்லை. எங்களுக்கு கவனிக்க வேறு முக்கிய விஷயங்கள் உள்ளது. சிஎஸ்கே வீரர்கள் ஃபிட்னெஸ்-இல் குறைந்தவர்கள் என முத்திரை பதிக்க நான் விரும்பவில்லை" என்றார்.

களத்தில் நிரூபித்தால் போதும்

களத்தில் நிரூபித்தால் போதும்

ஸ்டீபன் பிளெம்மிங் மறைமுகமாக சிஎஸ்கே வீரர்கள் அதிக வயது உடையவர்கள் என்பதால், உடற்தகுதி எல்லாம் பார்க்க வேண்டாம். அப்படி உடற்தகுதி தேர்வு வைத்தால், சிஎஸ்கே வீரர்கள் ரொம்ப "வீக்" என தெரிந்து விடும். அதனால், களத்தில் ஆடி, தங்களை நிரூபித்தால் போதும் என கூறியுள்ளார்.

டாடி ஆர்மி

டாடி ஆர்மி

சென்னை அணி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட போதே வயதானவர்கள் அணி என கேலி செய்யப்பட்டது. சிலர் "டாடி ஆர்மி" என கிண்டல் செய்தார்கள். ஆனால், அதை மீறி சென்னை அணி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.

யோ-யோ தேவையா?

யோ-யோ தேவையா?

மேலும், யோ-யோ டெஸ்ட் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்திய அணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது முதல் விராட் கோலி - ரவி சாஸ்திரி போன்றோர் அதை முக்கிய தகுதியாக வைத்துள்ளார்கள். ஆனால், வெற்றி பெற அதெல்லாம் தேவையில்லை என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

வெற்றி பெறும்

வெற்றி பெறும்

சென்னை அணி உடற்தகுதி, இளம் வீரர்கள் போன்றவற்றை எல்லாம் தாண்டி அனுபவம் என்ற ஆயுதத்தை வைத்து கடந்த ஆண்டு வெற்றி பெற்றது. இந்த ஆண்டும் அதே பாதையில் தான் செல்ல உள்ளது என்பதில் பயிற்சியாளர் பிளெம்மிங் தெளிவாக இருக்கிறார்.

Story first published: Friday, March 22, 2019, 10:45 [IST]
Other articles published on Mar 22, 2019
English summary
IPL 2019 : Chennai Super Kings not going to conduct Yo-Yo test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+