For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க!

Recommended Video

IPL 2019: IPL matches delay: ஐபிஎல் போட்டி 4 மணி நேரமா?.. அதிருப்தியில் ரசிகர்கள்- வீடியோ

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் புதிய புகார் ஒன்று கூறப்பட்டு வருகிறது. ஐபிஎல் டி20 போட்டிகள் என்றாலே மூன்றே கால் மணி நேரத்தில் முடிந்து விடும் என்பதால் தான் அதிக ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.

ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் முடிய கிட்டதட்ட நான்கு மணி நேரம் ஆகிறது. இதனால், ரசிகர்கள் பலர் நடு இரவு வரை போட்டிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைதானத்திற்கு வந்து பார்க்கும் ரசிகர்களின் நிலைமை அதை விட மோசம்.

கோலி...!! உங்களுக்கு தான் ஸ்பின் பவுலிங் ஆட தெரியல.. என்ன பண்ண போறீங்க...? போட்டு தாக்கும் அந்த வீரர் கோலி...!! உங்களுக்கு தான் ஸ்பின் பவுலிங் ஆட தெரியல.. என்ன பண்ண போறீங்க...? போட்டு தாக்கும் அந்த வீரர்

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஐபிஎல் போட்டிகள் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதற்கான காரணங்கள் - சிக்ஸர் சென்ற பந்தை மீண்டும் எடுத்து வருவது, பந்து மாற்றுதல், வீரர்கள் காயம், பேட்ஸ்மேன் தன் உபகரணங்களை மாற்றுதல், பீல்டிங் மாற்றுதல் உள்ளிட்டவை தான்.

அபராதம் மட்டுமே!

அபராதம் மட்டுமே!

குறிப்பாக, இரண்டாவது அணி பேட்டிங் செய்யும் போது இரு அணிகளும் சமநிலையில் இருந்தால், பந்துவீசும் அணி தங்கள் திட்டங்களை பேசி, செயல்படுத்த நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. இதை கட்டுப்படுத்த ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை மட்டுமே இப்போது உள்ளது.

100 பால் போட்டிகள்

100 பால் போட்டிகள்

இது பற்றி முன்னாள் வீரர்கள், ஐபிஎல் அணி பயிற்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை கூறி உள்ளனர். இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் டி20 போட்டிகள் நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்வதால் புதிதாக வரப்போகும் "100 பால்" போட்டிகள் தீர்வாக இருக்கும் என கூறி உள்ளார்.

டாம் மூடி கருத்து

டாம் மூடி கருத்து

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர் டாம் மூடி, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அணிகளுக்கு தொடரில் அவர்களின் நெட் ரன் ரேட்டில் இருந்து ரன்களை கழிக்கலாம் என யோசனை கூறி உள்ளார். அது அந்த அணிகள் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுமை இருக்காது

பொறுமை இருக்காது

இதில் பொதுவான ஒரு கருத்தாக இருப்பது டி20 போட்டிகளையும், ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் போல மக்கள் முழுதாக பார்க்காமல் இருக்கும் காலம் வந்துவிட்டது என்பதே! ஐபிஎல் அணிகள் போட்டிகளை விரைவாக முடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் தங்கள் பொறுமையை இழந்துவிடுவார்கள் என்பதே உண்மை.

Story first published: Friday, April 5, 2019, 13:46 [IST]
Other articles published on Apr 5, 2019
English summary
IPL 2019 : Complaints raising that IPL matches are taking 4 hours to complete
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X