Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமே வயசான டீம் இல்லை.. அடுத்த ஐபிஎல்ல புதுசா வர்றோம்.. தோனிக்காக தான் வெயிட்டிங்.. சிஎஸ்கே தடாலடி!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன்னில் தோல்வி அடைந்து வெளியேறியது கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கடந்த இரண்டு சீசன்களாக வயதான அணி என கிண்டல் செய்யப்படும் சென்னை அணி, அந்த வயதான அணியைக் கொண்டே 2018இல் ஐபிஎல் கோப்பை வென்றது. 2019இல் இறுதிப் போட்டி வரை முன்னேறி, 1 ரன்னில் தோல்வி அடைந்துள்ளது.

ஆனாலும், 2019 ஐபிஎல்-இல் சென்னை அணி பல இடங்களில் தடுமாறியது. அதற்கு முக்கிய காரணம், பார்ம் இழந்த மூத்த வீரர்கள் தான்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

இந்த நிலையில், அணியில் இளம் வீரர்கள் சரி சமமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ள சென்னை அணி அடுத்த ஆண்டு திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்க்க உள்ளது என்ற தகவலை போட்டிக்குப் பின் பேட்டி அளித்த பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறினார்.

வயதான அணி

வயதான அணி

இது குறித்து பேசுகையில், "வயதான அணி என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எனவே, அணியை புதிதாக மாற்ற வேண்டும் என்பதை குறித்து நாங்கள் பார்க்க வேண்டும்" என்றார் பிளெம்மிங்.

தோனி வந்த பின்..

தோனி வந்த பின்..

மேலும், தோனி உலகக்கோப்பைக்கு செல்ல உள்ளதால் அவர் வந்த பின் இதற்கான வேலைகளில் இறங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, சென்னை அணி எப்படியும் அடுத்த ஐபிஎல் தொடரில் புதிய அணியாக மாறிவிடும் என தெரிகிறது.

பேட்டிங் மோசம்

பேட்டிங் மோசம்

2019 ஐபிஎல் தொடரில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் கேதார் ஜாதவ் என பல வீரர்கள் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். சில போட்டிகளில் அவர்கள் ரன் குவித்தாலும், பல போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

Story first published: Monday, May 13, 2019, 18:37 [IST]
Other articles published on May 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+