For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பார் மஞ்ச கலரா? சிவப்பு கலரா? அடித்துக் கொண்ட சிஎஸ்கே - பெங்களூர் அணிகள்.. ஐபிஎல் பஞ்சாயத்து!

சென்னை : ஐபிஎல் 2019 தொடருக்கான முதல் இரு வார அட்டவணை நேற்று வெளியானது.

இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை, பெங்களூர் அணிகள் மோத உள்ளன. அதற்கு முன்பாக ட்விட்டரில் இரு அணிகளும் ஒன்றை, ஒன்று சீண்டிக் கொண்டன.

ட்விட்டர் மோதல்

ட்விட்டர் மோதல்

ஐபிஎல் 2019 தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. அதை குறிப்பிட்டு பெங்களுர் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

இனிப்பான சாம்பார்

அதில், "ஸ்பைசியான தென்னிந்திய போட்டிகள் ஆரம்பம்.. ஆனால், எங்களுக்கு ஸ்வீட் சாம்பார் தான் வேண்டும்" என உணவையும், ஐபிஎல் துவக்க போட்டியையும் ஒப்பிட்டு தங்களுக்கு கர்நாடகாவின் இனிப்பான சாம்பார் தான் வேண்டும் என கூறி இருந்தது.

மஞ்சள் நிறத்தில் சாம்பார்

இதற்கு பதில் அளித்த சென்னை அணி, "ஆனால், சாம்பார் மஞ்சள் நிறத்தில் தானே இருக்கும்" என கூறி இருந்தது. சென்னை அணியின் உடை மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். மேலும், மஞ்சளை தங்கள் அடையாளமாகவே மாற்றிக் கொண்டுள்ளது சென்னை அணி. அதை வைத்து பெங்களூர் அணியை கலாய்த்தது.

வேட்டை ஆரம்பம்

இந்த ட்விட்டர் சீண்டல்கள் ரசிகர்களையும் தூண்டி விட்டுள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் இந்த சீண்டலை ரசித்தும், பெங்களூர் அணியை கலாய்த்தும் ட்வீட் போட்டு வருகின்றனர். இங்கே ஒருவர் "சிஎஸ்கே (அட்மின்) வேட்டை ஆரம்பம்.. இனிமே சரவெடி தான்" என கூறியுள்ளார்.

செம பார்மில் அட்மின்

சிஎஸ்கே அட்மின் செம பார்மில் இருக்கிறார் என இங்கே ஒருவர் மீம் போட்டு கலாய்த்துள்ளார்.

பார்க்கணும் போல இருக்கே!

யாருப்பா அந்த அட்மின் எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்கே!

சிவப்பு சாம்பார்

இந்த ட்வீட்டுக்கு பதில் சொன்ன சில பெங்களூர் ரசிகர்கள், சாம்பார் எங்க ஊரில் சிவப்பு நிறத்தில் இருக்கும் என கூறினர்.

சாம்பார் மட்டும் தான் கிடைக்கும்

இங்கே ஒருவர் சாம்பார் மட்டும் தான் சென்னை அணிக்கு.. கோப்பை எங்களுக்கு என பதிலடி கூறி இருக்கிறார்.

சாம்பார் யாருக்கு?

சாம்பார் யாருக்கு?

ஆக மொத்தத்தில், ஐபிஎல் அணிகள் ரசிகர்களை சீண்டி விட்டு இந்த வருடமும் கல்லா கட்ட தயாராகி விட்டன. இந்த முறை சாம்பார் யாருக்கு, கோப்பை யாருக்கு என பார்க்கலாம்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்காதா? அப்படி எந்த அறிகுறியும் தெரியலையே! இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்காதா? அப்படி எந்த அறிகுறியும் தெரியலையே!

Story first published: Wednesday, February 20, 2019, 14:26 [IST]
Other articles published on Feb 20, 2019
English summary
IPL 2019 - CSK gave a savage reply to RCB over Sweet Sambar comment
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X