Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

VIDEO : இந்த மாதிரி சிலம்பம் சுத்த முடியுமா? வேட்டி கட்டி.. மெர்சல் காட்டி.. வைரலான ஹர்பஜன் சிங்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவ்வப்போது தன் வீரர்களை வேடிக்கையாக ஏதாவது செய்ய வைத்து அதை வீடியோவாக்கி வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த முறை சென்னை வீரர்கள் சிலம்பம் சுற்ற வைத்து வெளியிட்டது சிஎஸ்கே. அதில் பல வீரர்கள் திணறினர். ஆனால், ஹர்பஜன் மிரட்டி விட்டார்.

அருமை

சென்னை அணியின் இந்த போட்டோஷூட்டில் பல வீரர்களும் கலந்து கொண்டனர். ஹர்பஜன் சிங் வேட்டி கட்டிக் கொண்டு முதலில் ஒரு சிலம்பத்தை வாங்கி அருமையாக சுற்றினார். ஓரளவு தேறிய சிலம்ப வீரர் போலவே இருந்தது அந்த ஆட்டம்.

இரட்டை ஆட்டம்

அடுத்து இரண்டாவது சிலம்பத்தையும் வாங்கிய ஹர்பஜன், ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்ற பெரும் திகைப்பு ஏற்பட்டது. நல்ல வேகத்தில் அதிக தடங்கல் இல்லாமல் அருமையாக இரண்டு கைகளிலும், சிலம்பம் சுற்றினார் ஹர்பஜன் சிங்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

ஹர்பஜன் சிங் வெளியிட்ட சிலம்ப வீடியோவின் கீழ் அவரது மனைவியே ஆச்சரியம் தெரிவித்து இருந்தார். "உங்களுக்கு இதெல்லாம் தெரியும் என எனக்கு தெரியாதே!" என கூறி இருந்தார்.

அடுத்த போட்டியில் ஹர்பஜன்?

அடுத்த போட்டியில் ஹர்பஜன்?

ஷிகர் தவான் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் இந்த வீடியோவை கண்டு வியப்பை தெரிவித்துள்ளனர். ஹர்பஜன் காயம் காரணமாக சென்னை அணி ஆடிய கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்கது. அடுத்த போட்டியில் ஹர்பஜன் பங்கேற்பார் என தெரிகிறது.

மற்றவர்கள் எப்படி?

மற்ற சென்னை வீரர்கள் ஒன்றிரண்டு சுற்று சுற்றவே தடுமாறினர். சிலர் மெதுவான வேகத்தில் சுற்றினர். பலரும் பாதியில் சிலம்பத்தை கீழே விட்டுவிட்டனர். ஹர்பஜன் சிங் சுற்றியதில் பாதி அளவு கூட யாரும் சிலம்பம் சுற்றவில்லை.

Story first published: Saturday, April 20, 2019, 22:02 [IST]
Other articles published on Apr 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+