For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப்பாவமே!! சிஎஸ்கே மட்டுமில்லை.. சேப்பாக்கமும் ராசியில்லை.. ஆர்சிபி-யின் பரிதாப நிலை!

Recommended Video

சென்னை -பெங்களூரு கடந்த கால வரலாறு- வீடியோ

சென்னை : ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே மார்ச் 23 நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற விவாதங்கள் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அந்த அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பது போல் தான் இருக்கிறது.

குறைந்த வெற்றிகள்

குறைந்த வெற்றிகள்

சென்னை - பெங்களூர் அணிகள் இதுவரை மோதிய 22 போட்டிகளில், 14 முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் அணி 7 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆறு தோல்விகள்

ஆறு தோல்விகள்

அது மட்டுமில்லாமல், கடந்த ஆறு முறை சென்னை அணியுடனான போட்டிகளில் பெங்களூர் தோல்வி அடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் தான் கடைசியாக சென்னை அணியை பெங்களூர் அணி வீழ்த்தி இருக்கிறது.

இதுவும் ராசியில்லை

இதுவும் ராசியில்லை

சரி, சென்னை அணியுடன் தான் பெங்களூர் அணிக்கு ராசியில்லை என்று பார்த்தால், சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கும், பெங்களூர் அணிக்குமே ராசியில்லை. அங்கும் அதிக தோல்விகளை சந்தித்துள்ளது பெங்களூர்.

சேப்பாக்கத்தில் பெங்களூர்

சேப்பாக்கத்தில் பெங்களூர்

சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூர் அணி ஆடிய ஏழு போட்டிகளில் ஆறில் தோல்வி அடைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு மட்டுமே ஒரே ஒரு வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு சோகம்

கடந்த ஆண்டு சோகம்

மேலும், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி இரு முறையும் பெங்களூர் அணியை தோற்கடித்து இருந்தது. கடந்த ஆண்டு, ஒரு போட்டியில் 200க்கும் அதிகமாக ரன் குவித்து, சென்னையிடம், பெங்களூர் அணி தோல்வி அடைந்தது.

மாறுமா பெங்களூர்?

மாறுமா பெங்களூர்?

ஆக மொத்தத்தில், பெங்களூர் அணிக்கு, சென்னை அணிக்கு எதிரான போட்டிகளில் சுத்தமாக ராசியில்லை. ஆனால், யை எல்லாம் பெங்களூர் அணியின் கடந்த காலத்தில் இருந்து வந்தவை. இந்த சீசனில் கோலியின் அணி வெற்றிப் பாதையில் பயணிக்குமா? இல்லை மீண்டும் ஒரு மோசமான ஐபிஎல் தொடரை எதிர்கொள்ளுமா? முதல் போட்டியில் பார்க்கலாம்.

Story first published: Friday, March 22, 2019, 14:58 [IST]
Other articles published on Mar 22, 2019
English summary
IPL 2019 : CSK is favourite against RCB in the season opener
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+