Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களே.. மன தைரியத்தோடு இருங்க.. ஃபைனலுக்கு போக இன்னொரு வாய்ப்பு இருக்கு!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்து, இறுதிப் போட்டிக்கு எளிதாக முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனினும், சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்னொரு வாய்ப்பு உள்ளது.

IPL 2019 : CSK still have a chance to enter finals and face MI again

லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்தாலும், இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.

புள்ளிப் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் தகுதி நீக்கப் போட்டியில் (Eliminator) மோதும். அதில் வெற்றி பெறும் அணி, இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும். தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

லீக் போட்டிகளின் முடிவில் மும்பை அணி முதல் இடமும், சென்னை அணி இரண்டாம் இடமும் பெற்று, முதல் தகுதிச் சுற்றில் மோதின. இதில் தான் சென்னை தோல்வி அடைந்துள்ளது.

தற்போது மூன்றாம் இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், நான்காம் இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் உள்ளன. அந்த அணிகள் நாளை தகுதி நீக்கப் போட்டியில் முன்னேற உள்ளன. அதில் வெற்றி பெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கும்.

சென்னை அணி அந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேறி, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க நேரிடும். இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது ஒரு கண்டம் என்றால், அங்கே இந்த சீசனில் மூன்று முறை தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்து வெற்றி பெற்றால் தான் கோப்பை வெல்ல முடியும் என்பது அடுத்த கண்டம்.

எத்தனை கண்டம் வந்தாலும்.. சென்னை அணியும், அதன் ரசிகர்களும்.. ஒரே ஒருவரை தான் நம்பி உள்ளனர். அவர் தான் காப்பாற்ற வேண்டும்.

Story first published: Wednesday, May 8, 2019, 13:56 [IST]
Other articles published on May 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+