Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டான்ஸ் ஆடிய பிராவோ.. எக்ஸ்பிரஸ் வேக தாஹிர்.. தோனி வந்தா தான் எல்லாம் சரியா இருக்கு!!

சென்னை : டெல்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதற்கு முன்பு நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மொத்தமாக சரணடைந்து அதிர்ச்சி அளித்து இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், டெல்லி போட்டியில் முற்றிலும் வேறு ஒரு அணியாக காட்சி அளித்தது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

நேற்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 179 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 7வது ஓவருக்குள் மூன்று முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாற்றம் அடைந்தது.

தாஹிர் உற்சாகம்

தாஹிர் உற்சாகம்

7வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய 2வது பந்தில், ரிஷப் பண்ட், பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அந்த விக்கெட்டை எடுத்தவுடன், தாஹிர் தலைதெறிக்க உற்சாகத்தில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓட ஆரம்பித்தார்.

இப்ப தான் ஒழுங்கா இருக்கு

இப்ப தான் ஒழுங்கா இருக்கு

கேட்ச் பிடித்த பிராவோ நின்ற இடத்திலேயே தன் வழக்கமான வெஸ்ட் இண்டீஸ் நடனத்தை ஆட ஆரம்பித்தார். இதைக் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள், "தோனி வந்த பின்னாடிதான் டீம் ஒழுங்கா இருக்கு.." என நிம்மதி அடைந்தனர். தோனி இல்லாத போது, இந்த உற்சாகம் சிஎஸ்கே வீரர்கள் இடையே காணப்படவில்லை.

போராடவில்லை

போராடவில்லை

மும்பை இந்தியன்ஸ் போட்டியில், தோனி, ஜடேஜா, டு ப்லேசிஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை. சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கிய சென்னை அணி மும்பையிடம் படுதோல்வி அடைந்தது. எந்த வகையிலும் வெற்றிக்காக போராடவில்லை. இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கிய உடன் வேறு அணியாக மாறியது சென்னை.

Story first published: Thursday, May 2, 2019, 12:56 [IST]
Other articles published on May 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+