Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மாயமோ.. மந்திரமோ!! தோனி வந்தவுடன் மொத்தமாக மாறிய சிஎஸ்கே.. சின்னாபின்னமான டெல்லி! என்ன நடந்தது?

சென்னை : 2019 ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தி, வெற்றி பெற்றது சென்னை அணி.

1
45926

கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் காய்ச்சல் காரணமாக பங்கேற்காத தோனி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அணிக்கு திரும்பினார்.

தோனி மேஜிக்

தோனி மேஜிக்

மும்பை இந்தியன்ஸ் போட்டியில், சென்னை படுதோல்வி அடைந்து இருந்தது. அதனால் தோனி இந்தப் போட்டியில் ஆடுவாரா என்ற ஆவலில் இருந்த ரசிகர்கள் தோனி டாஸ் போட வந்தவுடன் ஆர்ப்பரித்தனர். அப்போது தொடங்கியது தோனி மேஜிக்.

வாட்சன் அதிர்ச்சி

வாட்சன் அதிர்ச்சி

டெல்லி அணி டாஸில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த முடிவு பெரிய தவறாக முடிந்தது. சென்னை அணிக்கு வாட்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தாலும், டு ப்லேசிஸ் 39, ரெய்னா 59 ரன்கள் எடுத்து அருமையான அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தனர்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

முதலில் மிக பொறுமையாக ஆடி வந்த சென்னை அணி 10 ஓவர்களில் 53 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. தோனி 14வது ஓவரில் 4வது வரிசை பேட்ஸ்மேனாக வந்தார். அவருடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.

ஜடேஜா அதிரடி

ஜடேஜா அதிரடி

ஜடேஜா வந்த வேகத்தில் சிக்ஸ், ஃபோர் என அடிக்கத் துவங்கினார். அவர் அடிக்கும் வரை நிதானமாக ஆடினார் தோனி. ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

வெளுத்த தோனி

வெளுத்த தோனி

பின்னர் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த தோனி, வழக்கம் போல கடைசி ஓவர்களில் வெளுக்க ஆரம்பித்தார். கடைசி இரு பந்துகளில் சிக்ஸர் அடித்து அற்புதமாக சென்னை இன்னிங்க்ஸ்-ஐ முடித்து வைத்தார்.

தோனி அபார பேட்டிங்

தோனி அபார பேட்டிங்

10 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த சென்னை, 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்களை எட்டி இருந்தது. தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து டெல்லி அணி சேஸிங் செய்ய வந்தது.

துவங்கி வைத்த தீபக் சாஹர்

துவங்கி வைத்த தீபக் சாஹர்

தோனி தன் சுழற் பந்துவீச்சு படையோடு விக்கெட்களை அள்ள தயாராக இருந்தார். அதற்கு முன்பே, முதல் ஓவரில் ப்ரித்வி ஷா விக்கெட்டை சாய்த்தார் தீபக் சாஹர். அடுத்து ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ஜடேஜா விக்கெட்களை அள்ளத் துவங்கினர்.

மின்னல் ஸ்டம்பிங்

மின்னல் ஸ்டம்பிங்

இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இம்ரான் தாஹிர் வீசிய 11வது ஓவரில் 2 விக்கெட்கள் சாய்த்தார். அதற்கு அடுத்த ஓவரில், ஜடேஜாவுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தது. இந்த விக்கெட்கள் இரண்டும் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் கிடைத்தது என்பது நம்பமுடியாத ஆச்சர்யம்.

பரிதாப டெல்லி

பரிதாப டெல்லி

டெல்லி அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 44, தவான் 19 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சுத்தமாக ரன் குவிக்கவில்லை.

தோனியால் வெற்றி

தோனியால் வெற்றி

தோனி இல்லாத போட்டியில் பரிதாபமாக மும்பையிடம் சரணடைந்த சென்னை அணி, டெல்லியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தோனியின் அட்டகாச பேட்டிங், கீப்பிங் மற்றும் கேப்டன்சியால் மீண்டும் ஒரு போட்டியில் வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்!!

Story first published: Thursday, May 2, 2019, 0:20 [IST]
Other articles published on May 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+