அப்படி என்ன அவசரம்? பந்து வீசாமல் மிரட்டிய தீபக் சாஹர்.. உஷாரான தவான்! ஆரம்பமே அட்டகாசம்!! #CSKvsDC
Recommended Video
விசாகப்பட்டினம் : 2019 ஐபிஎல் தொடரின் இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் சென்னை அணியின் தீபக் சாஹர், டெல்லி அணியின் ஷிகர் தவானை வேடிக்கையாக எச்சரித்த சம்பவம் நடந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் ப்ரித்வி ஷா ஸ்ட்ரைக் பேட்ஸ்மேனாக நின்றார். தவான் எதிர்முனையில் இருந்தார். சென்னை அணியின் தீபக் சாஹர், முதல் ஓவரை வீச தயாராகி, முதல் பந்தை வீச ஓடி வந்தார். எனினும், கிரீஸ் அருகே வந்த பின் பந்து வீசாமல் நின்றார்.
பலரும் முக்கியப் போட்டி என்பதால் தீபக் சாஹர் பதற்றத்தில் இருக்கிறார் என எண்ணினர். ஆனால், தீபக் சாஹர், தவானை பார்த்து சிரித்து சென்றார். அப்போது தான், தவான் பந்து வீசும் முன்பே கிரீஸை விட்டு சில அடிகள் எடுத்து வைத்து, சாஹர் பந்து வீசாமல் நின்றதை பார்த்து, பின் வாங்கியதை கவனித்தனர்.
முதல் பந்திலேயே பந்து வீசாமல் வேடிக்கையாக தவானை மிரட்டினார் தீபக் சாஹர். இந்தப் போட்டியில் டெல்லி அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், சேஸிங் செய்த சென்னை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications