செம கிளிக்.. இதாங்க பெஸ்ட்.. ஒரு பக்கம் கங்குலி.. ஒரு பக்கம் தோனி.. அடடா.. மலரும் நினைவுகள்!
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே நடைபெற்ற 50வது ஐபிஎல் லீக் போட்டி முடிந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்தப் போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. போட்டிக்குப் பின்னர் இரு அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்டோர் கை குலுக்கி பிரிந்தனர்.

அந்த சந்திப்பு
அப்போது, டெல்லி அணியின் ஆலோசகராக இருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியும், சென்னை அணியின் கேப்டனும், இந்திய அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் தோனியும் சந்தித்துக் கொண்டனர்.

பழைய நினைவுகள்
அப்போது கங்குலி, தோனியிடம் பேசினார். அந்த கணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் பரவி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் பழைய கிரிக்கெட் நினைவுகளுக்குள் மூழ்கினர்.
கங்குலி - தோனி காலம்
கங்குலியின் கீழ் சிறந்த இந்திய அணி உருவான காலகட்டத்தையும், தோனியின் கீழ் இந்திய அணி பெரிய வளர்ச்சி அடைந்த காலத்தையும் நினைத்து கருத்துக்களை கூறி வந்தனர். சிலர் நச்சென்று கருத்து கூறியுள்ளனர். அவற்றில் சில -
கேப்டன் ஆக்ரோஷம்
கங்குலி (கேப்டன் ஆக்ரோஷம்) மற்றும் தோனி (கேப்டன் கூல்)
சிறந்த புகைப்படம்
போட்டியின் மிகச் சிறந்த புகைப்படம்!
சிறந்த கணங்கள்
போட்டியின் மிகச் சிறந்த கணங்கள்!!


Click it and Unblock the Notifications