Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்தை எட்டிப் பிடித்த ஆட்டநாயகன் தோனி.. பீல்டிங்கில் சதம் அடித்த சுரேஷ் ரெய்னா!!

சென்னை : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இருவரும் குறிப்பிட்ட சாதனைகளை செய்தனர்.

நேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்தார். 37 பந்துகளில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது ரெய்னாவின் 50வது டி20 போட்டி சதமாகும்.

100 கேட்ச்கள்

100 கேட்ச்கள்

அடுத்து டெல்லி அணியின் பேட்டிங்கின் போது ப்ரித்வி ஷா கொடுத்த கேட்ச்சை பிடித்தார். அது ஐபிஎல் தொடரில் ரெய்னா பிடித்த நூறாவது கேட்ச் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் நூறு கேட்ச்கள் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் ரெய்னா.

அடுத்த இடத்தில்..

அடுத்த இடத்தில்..

அவருக்கு அடுத்த இடத்தில் டி வில்லியர்ஸ் 84 கேட்ச்களுடனும், ரோஹித் சர்மா 82 கேட்ச்களுடனும் ரெய்னாவுக்கு அடுத்த இடங்களில் இருக்கின்றனர். பீல்டர்கள் தவிர்த்து, விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக் நூறுக்கும் அதிகமான கேட்ச்கள் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

டெல்லி அணிக்கு எதிரான அதே போட்டியில் தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். மேலும், இரண்டு மின்னல் வேக ஸ்டம்பிங்கள் மற்றும் ஒரு கேட்ச் பிடித்திருந்தார். வெற்றிக்கு முக்கிய காரணமான அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ரோஹித் சாதனை

ரோஹித் சாதனை

இதுவரை ஐபிஎல் தொடரில் தோனி 17 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இதன் மூலம், அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார் தோனி.

தோனி ரன் குவிப்பு

தோனி ரன் குவிப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி இதுவரை மூன்று முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். 11 போட்டிகளில் 358 ரன்கள் குவித்துள்ளார். அடுத்து உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், தோனியின் பார்ம் உச்சத்தில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Story first published: Thursday, May 2, 2019, 19:34 [IST]
Other articles published on May 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+