Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி இல்லைனா மொத்தமா சரண்டர் ஆயிடுவாங்களே.. இன்னைக்காவது ஆடுவாரா? கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்!!

சென்னை : தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை.

கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்கவில்லை. தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் விளக்கம் அளித்துள்ளார்.

ஆடுவாரா?

ஆடுவாரா?

காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் அவதிப்பட்டு வந்த தோனி, அதில் இருந்து மீண்டு வருவதாகவும், போட்டிக்கு முன்னதாக அவர் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார் பிளெம்மிங்.

தோனி காய்ச்சல்

தோனி காய்ச்சல்

முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் போட்டியில் தோனி மற்றும் ஜடேஜா காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. அதனால், ரசிகர்கள் கவலை அடைந்து இருந்தனர். அவர்களுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அப்போது பயமுறுத்தினார் பிளெம்மிங்.

முதுகு நரம்புப் பிரச்சனை

முதுகு நரம்புப் பிரச்சனை

தோனிக்கு அதற்கு முன்பு முதுகில் நரம்புப் பிரச்சனை இருந்து வந்தது. அதனால், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. பின்னர், அந்த பிரச்சனை ஓரளவு குணமாகி விட்டது என்று தொடர்ந்து ஆடி வந்தார்.

இரு மோசமான தோல்விகள்

இரு மோசமான தோல்விகள்

தோனி ஆடாத இரு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் படு மோசமாக தோல்வி அடைந்து இருந்தது. அந்தப் போட்டிகளில் வெற்றிக்கு எந்த விதத்திலும் போராடவில்லை. மொத்தமாக சரணடைந்து அதிர்ச்சி அளித்தது சென்னை. இது ரசிகர்களை மேலும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அணித் தேர்வு

அணித் தேர்வு

கடந்த போட்டியில் தோனி மட்டுமின்றி டு, ப்லேசிஸ், ஜடேஜாவும் பங்கேற்கவில்லை. அதனால், அணித் தேர்விலும் குழப்பம் ஏற்பட்டது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆட இருவரும் தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.

ஜடேஜா, டு ப்லேசிஸ்

ஜடேஜா, டு ப்லேசிஸ்

டெல்லி கேபிடல்ஸ் போட்டிக்கான பயிற்சியில் ஜடேஜா, டு ப்லேசிஸ் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தோனி இதுவரை பயிற்சி மேற்கொள்ள வரவில்லை என்றே தெரிகிறது. தோனி ஆடாவிட்டால், அடுத்த போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் "சரண்டர்" ஆகிவிடுமே என்ற கவலையில் உள்ளனர் ரசிகர்கள்.

Story first published: Wednesday, May 1, 2019, 13:11 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+