Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்!! தோனியும்.. டி வில்லியர்ஸ்-ம்.. வேற வேற இல்லை.. அதே ஃபுல் டாஸ்.. அதே ஒற்றைக் கை சிக்ஸ்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் போட்டியில் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்த தோனி பேட்டிங்கில் தெறிக்கவிட்டார்.

14வது ஓவரில் களமிறங்கிய தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்து சென்னை அணியை பெரிய ஸ்கோரை எட்ட வைத்தார். இந்தப் போட்டியில் டி வில்லியர்ஸ் கடந்த வாரம் அடித்த ஒரு சிக்ஸ் போன்றே, தோனியும் ஒரு சிக்ஸ் அடித்தார்.

ஷமி வீசிய ஃபுல் டாஸ்

ஷமி வீசிய ஃபுல் டாஸ்

கடந்த வாரம் பெங்களூர் - பஞ்சாப் இடையே நடந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது டி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடி வந்தார். 19வது ஓவரில் ஷமி ஒரு பந்தை உயரமான ஃபுல் டாஸாக வீசினார்.

டி வில்லியர்ஸ் சிக்ஸ்

டி வில்லியர்ஸ் சிக்ஸ்

அந்த பந்தை ஒற்றைக் கையில் சிக்ஸுக்கு விரட்டினார் டி வில்லியர்ஸ். அப்போது அந்த ஷாட் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சிக்ஸ் இடம் பெற்ற வீடியோவும் வைரல் ஆனது.

தோனி அடித்த சிக்ஸ்

தோனி அடித்த சிக்ஸ்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், தோனியும் அதிரடியாக ஆடி வந்தார். அதே 19வது ஓவரில் கிறிஸ் மோரிஸ், கையில் இருந்த வியர்வையின் ஈரம் காரணமாக தவறுதலாக உயரமான ஃபுல் டாஸ் வீசினார். அதை தோனி ஒற்றைக் கையில் சிக்ஸராக மாற்றினார்.

ரசிகர்கள் ஒப்பீடு

ரசிகர்கள் ஒப்பீடு

டி வில்லியர்ஸ் அடித்த பந்து அதிக உயரம் சென்றது. தோனி அடித்த பந்து சம தளத்தில் பறந்து சிக்ஸராக மாறியது. எனினும், இருவரும் ஃபுல் டாஸ் பந்தில் ஒற்றைக் கையில் சிக்ஸ் அடித்ததை ரசிகர்கள் ஒப்பிட்டு சிலாகித்து பேசி வருகின்றனர்.

தோனி அதிரடி

தோனி அதிரடி

தோனி இந்தப் போட்டியில் 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸராக மாற்றி மீண்டும் ஒரு முறை தன் பேட்டிங் சக்தியை உலகுக்கு காட்டினார்.

Story first published: Wednesday, May 1, 2019, 23:31 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+